.

ராகி லட்டு உருண்டை செய்வது எப்படி?
- முன் தயாரிப்பு :
- அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வையுங்க, அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடாகியதும் ஒரு கப் ராகி மாவு போடுங்க, மிதமான தீயில் ஒரு மூன்று நிமிடம் வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்துவைத்துக்கொள்ளுங்க.
- மீண்டும் அடுப்பில் அந்த பாத்திரத்தை வைத்து அரை கப் வேர்க்கடலையை கருகி விடாமல், ஆனால் வாசம் வரும் வரை வறுத்து, பின் அது ஆறியதும் மிக்ஸியில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்க. [ வறுத்த வேர்க்கடலை சமையலில் பலவற்றிற்கு பயன்படுத்துவதால் ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஓரளவிற்கு வறுத்து எடுத்து வைத்துக்கொண்டால் தேவை படும்போது பயன்படுத்தலாம் ]
- மீண்டும் அடுப்பில் வானொலி வைத்து முக்கால் கப் பொடித்த வெல்லத்தைப் போட்டு, அதில் கால் கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வெல்லத்தைக் கிளறிவிட்டுக் கரைத்து விடுங்க, வெல்லம் கரைந்து லேசாக கொதி வரும்போது இறக்கி விடுங்க.
இப்போது வறுத்த ராகி மாவு, வறுத்து பொடித்த நிலக்கடலை, மற்றும் கை பொறுக்கும் சூட்டில் கரைத்து வைத்த வெல்லக் கரைசல் இவை தயார்....
ராகி லட்டு உருண்டை / Ragi Laddu செயல்முறை :
- வறுத்து வைத்த ராகி மாவில், பொடித்து வைத்த வேர்க்கடலை துகள்களை சேருங்க,
- பொடித்த ஏலக்காய் தூள் சிறிதளவு மட்டும் சேருங்க,
- மூன்றையும் நன்கு கலந்து விடுங்க,
- இப்போது கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் வெல்லக் கரைசலை வடிகட்டி அந்த கலவையில் சேருங்க,
- இந்த கலவையை நன்கு பிசறிவிட்டு தேவையான அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- குறிப்பு :
- சூடாக இருக்கும் பொழுது தான் உருண்டை பிடிக்க வரும். கை பொறுக்காத அளவிற்கு சூடு இருந்தால், முதலில் ஒரு கரண்டியில் அந்த கலவையை நன்கு கிளறி விட்டு, பிறகு இளம் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.
- இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
- இதில் ராகி மாவை வறுத்து பயன்படுத்துவதால் சுவையும், சத்தும் கூடும்.
- இன்னும் சுவை வேண்டும் என்பவர்கள் முந்திரி பருப்பை வறுத்தோ அல்லது அப்படியே கூட பொடித்து சேர்க்கலாம்.
- அவ்வளவு தான் ராகி லட்டு உருண்டை ரெடி.
அவ்வளவு தான் ராகி லட்டு உருண்டை ரெடி.
.
Tags,
ragi laddu, ragi urundai, raagi laddu recipe, ராகி லட்டு, ராகி உருண்டை, ராகி லட்டு செய்முறை, ராகி லட்டு, ராகி லட்டு செய்வது எப்படி?, how to make ragi laddu, ragi laddu seivathu eppadi?,
.
