.

எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள்
அரைக்க வேண்டியவை :
- சின்ன வெங்காயம் உரித்தது ஒரு கைப்பிடி,
- பெரிய பூண்டாக ஒரு ஏழு எட்டு பூண்டு,
- சிறிதளவு இஞ்சி,
- சோம்பு ஒரு டீஸ்பூன்,
- கருவேப்பிலை அரை கைப்பிடி,
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை,
- ஏழு எட்டு வரமிளகாய்,
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வையுங்க.
பிசறி ஊறவைக்க வேண்டியவை :
- ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கி அலசி வைத்திருந்த தேவையான அரை கிலோ சிக்கன் துண்டுகள்,
- அரைத்து எடுத்து வைத்துள்ள விழுது,
- சிறிது மஞ்சள் தூள்,
- 1.5 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்,
- 1.2 டீஸ்பூன் மல்லித்தூள்,
- 1.2 டீஸ்பூன் அளவுக்கு மிளகுத்தூள்,
- கான்பிளார் மாவு 1.5 ஸ்பூன்,
- உப்பு,
- ஒரு முட்டை, [ உடைத்து ஊற்ற ]
- அரை டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சைச்சாறு சேருங்க
கறி துண்டுகளின் எல்லா பக்கமும் சென்று சேருமாறு நன்கு பிசறி விடுங்க. அதை ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்க.
எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செயல்முறை :
- ஒரு வாணலியில் சிக்கன் துண்டுகளை பொறிக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காயவிடுங்க,
- மீதமான தீயில் நெருப்பை ஏறிய விடுங்க,
- ஊறவைத்த சிக்கன் துண்டுகளில் தேவையான அளவு சிக்கன் துண்டுகளை எடுத்து எண்ணெயில் போடுங்க,
- எல்லா பக்கமும் நன்கு திருப்பி போட்டு, நன்கு பொரிந்ததும் எடுத்து விடுங்க.
அவ்வளவுதான் எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் ரெடி..
Tags,
எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள், Deep-fried chicken pieces seivathu eppadi?, fried chiken thundugal, poriththa chicken, chicken recipe, chicken fry, poriththa koli, poriththa koli seivathu eppadi?, varuththa koli, வறுத்த கோழி துண்டுகள், Fried chicken,
.
