அசைவம்

Chicken Shawaya Recipe in Tamil | வீட்டிலேயே அரபிக் சுவையில் சிக்கன் ஷவாயா செய்வது எப்படி?

.

வீட்டிலேயே அரபிக் சுவையில் சிக்கன் ஷவாயா செய்வது எப்படி?

சிக்கன் விரும்பி சாப்பிடுறவங்களுக்கு அதுவும் விதவிதமா தயாரிச்சு சாப்பிடணும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த சிக்கன் ஷவாயா (Chicken Shawaya) ரொம்பவே பிடிக்கும். வெளில லேசா பொன்னிறமா, உள்ள மெதுவா மென்மையாக, ஜூஸியா இருக்கிற இந்த சிக்கன் அரபி உணவு அப்படின்னு சொல்லுவாங்க. ஆனாலும் கூட இது கேரளால ரொம்ப ஃபேமஸ். தமிழ்நாட்டுலயும் கொஞ்சம் ஃபேமஸா தான் இருக்கு.

அட வீட்டிலேயே செஞ்சிடலாம் பா!. இது என்ன பெரிய விஷயமா அப்படின்னு… சட்டுன்னு சமையலறையில் போயி சமையல் வேலையை கையில் எடுக்கிற பெண்களுக்கு, இந்த சுவையான சிக்கன் ஷவாயா (Chicken Shawaya) வீட்டிலேயே ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம். சரியான மசாலா கலவை, போதுமான மரியேஷன் நேரம், சரியான முறையில் சமைக்கிறது, இது எல்லாம் சேர்ந்தா இந்த உணவை வீட்டிலேயே சமைத்து, சுவையா சாப்பிடுற அனுபவத்தை அனுபவிக்க முடியும். இப்ப வாங்க இது எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

சிக்கனை தயார் செய்ய

  • முழு சிக்கன் – 1 (சுமார் 1 முதல் 1.2 கிலோ)
  • எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சிக்கன் நல்லா சுத்தம் செய்துக்கோங்க,
  • கத்தியால அது மேல நல்லா லேசா கீறலா போடுங்க, [ அப்பதான் மசாலா தடவும் போது அது நல்ல சிக்கன்குள்ள உள்ள இறங்கும். ]
  • அது மேல எலுமிச்சை சாறும், உப்பும் தடவுங்க,
  • 15 நிமிஷம் அப்படியே வச்சிருங்க.

மரினேஷன் கலவை தயார் செய்ய

சமையல்ல ‘மரினேஷன்’ அப்படின்னா சமைக்கிறதுக்கு முன்னாடி இறைச்சி, மீன், காய்கறிகள் அப்புறம் மசாலா, உப்பு, இந்த புளிப்பு சார்ந்த சாறு எலுமிச்சை, தயிர், வினிகர் இதை எல்லாம் ஒண்ணா சேர்த்து, நல்லா கலந்து, அதை அப்படியே ஊற வைக்கிற முறைக்கு பெயர் தான் மரினேஷன். தமிழ்ல இத ‘இறைச்சியில் ஊற வைத்தது’ இல்லனா ‘மசாலா கலவையில் ஊற வைத்தல்’ அப்படின்னு செய்யற முறையை அப்படியே சொல்லுவாங்க. மசாலா பொருட்களோட சுவை அந்த உணவுல முழுசா போய் சேரணும், உள்ள இறங்கணும் அப்படிங்கறதுக்காக. நல்லா ஊற வெச்ச இறைச்சி தொடரத்துக்கு மென்மையா இருக்கணும், சாப்பிடும் போது மிருதுவா இருக்கணும், அப்படிங்கறதுக்காக தான் அதை ஊற வைக்கிறாங்க. சரி இதுக்கு இப்ப என்ன எல்லாம் தேவை என்று பார்க்கலாம்.

  • தயிர் – ½ கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை தூள் – ¼ டீஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் அல்லது சமையல் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

மரினேஷன் கலவை

ஒரு பாத்திரத்துல தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கொத்தமல்லித்தூள், கரம் மசாலா, பாப்ரிகா, இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய் தூள் அப்புறம் எண்ணெய் எல்லாத்தையும் சேர்த்து நல்லா கலக்குங்க. இது தான் மரினேஷன் கலவை.

சிக்கனை மரினேட் செய்ய

  • எலுமிச்சை சாறு உப்பு போட்டு தனியே வைத்திருந்த சிக்கனை எடுங்க,
  • அதன் மேலே இப்பொழுது கலந்த மரினேஷன் கலவையை போடுங்க,
  • அனைத்து பகுதிகளிலும் சமமாக இருக்குமாறு தடவுங்க,
  • குறைஞ்சது நாலு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வையுங்க.

வேகவைத்தல்

  • கடாய் – அடி கனமான கடாயில் கொஞ்சம் எண்ணெய் தடவுங்க,
  • மசாலா கலந்த சிக்கனை அதில் போட்டு கடாயை மூடி வையுங்க,
  • அடுப்பை மிதமான தீயில் வையுங்க,
  • ஒரு முக்கால் மணி நேரம் [ அல்லது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட ] வேக வையுங்க,
  • குக்கர் – குக்கர்ல வேக வைக்கிறதா இருந்தா குக்கரின் உள்ளே கொஞ்சம் எண்ணெய் தடவுங்க,
  • அதில் மசாலாவோட இருக்கிற அந்த சிக்கனை போட்டு, குக்கரை மூடி வச்சிடுங்க,
  • [ எவ்வளவு விசில் வரணும் அப்படின்னு உங்க குக்கர்ல உங்களுக்கு தான் தெரியும். அதனால ] விசில் வந்ததுக்கப்புறம் குக்கரை இறக்கி வச்சுடுங்க.

        இப்படியே கூட வெந்த சிக்கனை சாப்பிடலாம். மசாலாவும், கூடவே சிக்கனும் நல்லா வெந்து சாப்பிட பதத்தில் இருக்கும். [ நம்ம சப்பாத்திக்கு தொட்டுக்கறதுக்கு, இல்ல சாப்பாட்டுக்கு கொஞ்சம் பிசைஞ்சுக்கறதுக்கும் கொஞ்சம் கிரேவியா இருந்தா பரவால்ல அப்படின்னு தோணுச்சுன்னா...] நம்ம ஏற்கனவே மரினேஷன் கலவை செஞ்சு வச்சிருக்கோம் இல்லையா? அந்த கலவையில் முக்கால்வாசி இந்த சிக்கன் மேல தடவறதுக்கு பயன்படுத்திக்கலாம். இன்னும் கொஞ்சம் கலவையை எடுத்து தனியா வச்சி, கிரேவிக்கு பயன்படுத்திக்கலாம். 

கிரேவி

  • ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுங்க,
  • அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்க,
  • காய்ந்ததும் அதுல அந்த கலந்து வச்ச மீதி இருக்கிற அந்த கலவையை கொட்டுங்க,
  • லேசா கிளறி கொதிக்க விடுங்க,
  • கொத்தித்ததும் அதில் எடுத்து வச்சிருந்த அந்த கலந்த சிக்கன் மசாலாவை எடுத்து அதில் போடுங்க,
  • சின்ன சின்ன பீசா இருந்தா ஈசியா பிரட்டிடலாம்,
  • பெரிய கோழி பீசா இருந்தா, நல்ல வேகர வரைக்கும் திருப்பி போட்டு வேக விடுங்க.
  • சிக்கன் ஏற்கனவே நல்ல வெந்திருந்ததுனால மசாலா சீக்கிரமே வந்துடும். மசாலாவை கொஞ்ச நேரம் வேக வச்சா போதும்.
  • இப்ப இறக்கி வச்சிடுங்க,

      அவ்வளவுதான் சிக்கன் ஷவாயா (Chicken Shawaya) ரெடி....

குறிப்பு

  • சிக்கனை நீண்ட நேரம் மரினேட் செய்தால் மென்மையாக இருக்கும்.
  • தயிரை அளவுக்கு அதிகமாக சேர்க்க வேண்டாம்.
  • சமைக்கும் போது இடையிடையே சிக்கன் மீது அதன் சாறை தடவினால் (basting), அது மேலும் ஜூஸியாக இருக்கும்.
  • பரிமாறும் முன் 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க விட்டால் சிக்கனின் சாறு உள்ளேயே தங்கி சுவை அதிகரிக்கும்.

மசாலா அதிகமா சேர்க்காம, வெறும் சிக்கன் மட்டும் இருந்ததுனா கடிச்சு சாப்பிடுங்க. மசாலா அதிகம் ஊத்தி கொஞ்சம் கிரேவி மாதிரி இருந்ததுன்னா சாப்பாட்டுக்கோ அல்லது சப்பாத்திக்கோ தொட்டு சாப்பிடுங்க. சூப்பரா இருக்கும். செஞ்சு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு? கமெண்ட் பண்ணுங்க. ….அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..கடையில பரோட்டா வாங்கிட்டு வந்து இத வச்சு தொட்டு சாப்பிட்டா சும்மா செம சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

.

Tags:
Chicken Shawaya Recipe in Tamil, Chicken Shawaya, Arabic Chicken Recipe, Shawaya Recipe Tamil, Chicken Recipes Tamil, Homemade Shawaya, Garlic Sauce Recipe, Arabian Food Recipe, Non Veg Recipes Tamil, Chicken Grill Recipe, சிக்கன் ஷவாயா செய்முறை, சிக்கன் ஷவாயா, அரபு பாணி சிக்கன் செய்முறை, ஷவாயா செய்முறை, சிக்கன் உணவுகள், வீட்டிலேயே செய்யும் ஷவாயா, பூண்டு சாஸ் செய்முறை, அரேபிய உணவு செய்முறை, அசைவ உணவுகள், சிக்கன் கிரில் செய்முறை,

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.