.
வாழ்வியல் கதைகள் / பகுதி -1
“பயம் வந்துவிட்டால், நமக்குள் இருக்கும் திறமைகளைக்கூட நாம் பயன்படுத்த மறந்து விடுகிறோம்”
எலி சாதாரண சூழலில் இருக்கும்போது, மரத்தைத் துளைப்பது அதன் இயல்பான திறமை. எந்த மரப்பொருளாக இருந்தாலும் அதில் ஓட்டை போட்டு உணவைத் தேடவோ, தப்பிக்கவோ முடியும். ஆனால் அதே எலி மரப்பொறியில் சிக்கியவுடன் அதன் மனநிலை மாறிவிடுகிறது.
‘தான் சிக்கிக் கொண்டு விட்டோம்’ என்ற பயம் அதனை ஆட்கொள்கிறது. அதனால் இதுவரை செய்த அதே செயலை அதாவது மரத்தைக் கடித்து ஓட்டை போடலாமே என்று அதனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தப்பிக்க வழி தேடுவதற்கு பதிலாக பயத்தால் பதற்றமடைந்து, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கும். அல்லது நீண்ட நேரம் அதே இடத்திலேயே அப்படியே திகைத்து நின்றிருக்கும்.
அதாவது இங்கு ‘பிரச்சனை’ அந்த எலியின் திறமையை அதனிடம் இருந்து பறிக்கவில்லை. மாறாக அது தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அந்த பயமே அதன் சிந்திக்கும் திறனை மறக்கடித்து விட்டது.
நம்முடைய வாழ்க்கையிலும் இதே தான் நடக்கிறது…
அதாவது நமக்கும் பல திறமைகள் இருக்கின்றன. ஆனால் நமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடனோ, அல்லது நம் வாழ்வில் ஒரு தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது நாம் இருக்கும் வேலையை இழக்கும் நிலை வந்துவிட்டாலோ, அல்லது நம் குடும்பத்தின் கடன் சுமை அதிகரித்து விட்டாலோ, அல்லது குடும்ப உறவுகளில் தேவையற்ற குழப்பம் மற்றும் சிக்கல்கள் உண்டானாலோ….
நாம் நமக்கு ஏற்கனவே நமக்கு இருக்கும் அனுபவம், அறிவு, திறமை ஆகியவற்றை பயன்படுத்தாமல், “எல்லாம் முடிந்துவிட்டது” என்ற மனநிலைக்குச் சென்று விடுகிறோம். இப்போது நாமும் அந்த எலியைப் போலவே,
‘யாராவது வந்து காப்பாற்றுவார்களா என்று எதிர்பார்க்கிறோம்’. அதனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மறந்து விடுகிறோம்.
"பயம் மனிதனின் திறமையை அழிப்பதில்லை; அந்த திறமையை பயன்படுத்தும் சிந்தனையைத்தான் மறைத்து விடுகிறது. மனதை அமைதியாக வைத்திருப்பவரே எந்தச் சிக்கலிலிருந்தும் வெளியேறும் வழியைக் கண்டுபிடிப்பார்." குறிப்பு:
இந்தக் கதை ஒரு தத்துவ உவமைக்காக சொல்லப்பட்டது. நிஜ வாழ்க்கையில் ‘எலிகள் எல்லா வகையான மரப்பொறிகளிலிருந்தும் மரத்தைத் துளைத்து எளிதாகத் தப்பிக்க முடியும்’ என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. இங்கு குறிப்பிடப்படுவது, பயம் மற்றும் பதற்றம் மனித சிந்தனையை எவ்வாறு மழுங்கடிக்கிறது என்பதை விளக்கும் ஒரு உருவகமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக…
.
Tags,
வாழ்வியல் கதைகள், அறிவுரை கதைகள், குழந்தைகள் கதைகள், தத்துவ கதைகள், தத்துவங்கள், விழிப்புணர்வு கதைகள், Stories about life, moral stories, children’s stories, philosophical stories, philosophical insights, awareness-raising stories, thaththuva kathaigal,
.
சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…
. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…
. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…
. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…
. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…
This website uses cookies.