சைவம்

சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போல செய்வது எப்படி ?

.

சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போல செய்வது எப்படி? – pengalthalam

தேவையானவை :

  • பச்சரிசி – 1 கப்
  • பாசிப்பருப்பு – ¼ கப்
  • தண்ணீர் – 3 முதல் 4 கப்
  • பால் – ½ கப்
  • வெல்லம் – 1 முதல் 1½ கப்
  • ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
  • பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை (விருப்பம்)
  • நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி – 10
  • பாதாம் – 4
  • திராட்சை – 10

How to make Sakkarai Pongal just like temple prasadam?
சர்க்கரை பொங்கல் செய்முறை :

  • கால் கப் பச்சரிசியை லேசாக நிறம் மாறாமல் வறுத்து, ஆற வையுங்க.
  • அதனை ஒரு கப் பச்சரிசியுடன் சேர்த்து நன்றாக 2 அல்லது 3 முறை தண்ணீரில் அலசுங்க,
  • தண்ணீர் மற்றும் பால் சேர்த்து நன்றாக வேக விடுங்க.

  • குக்கரில் என்றால் எப்போதும் ஊற்றுவதை விட ஒரு கப் அல்லது ஒன்றரை கப் அதிகமாக தண்ணீரை சேர்த்து வேக விடுங்க. எப்பொழுதும் உள்ள விசில் அளவைவிட இரண்டு மூன்று விசில் அதிகமாக விட்டு இறக்குங்க.
  • குக்கர் அல்லாமல் பாத்திரத்தில் என்றால் அடி கனமான பாத்திரத்தில் பச்சரிசி பாசிப்பருப்பு கலவையை தண்ணீர், பால் சேர்த்து நன்றாக ஓரளவுக்கு குழைய வேக விடுங்க,
     அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும். 
  • மற்றொரு அடுப்பில் பாகு காய்ச்சுவதற்காக வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அடி கனமான பாத்திரத்தில் சற்றே கெட்டியாக ஆகும் வரை கிளறிவிட்டு காய்ச்சுங்க,
  • ஓரளவுக்கு கெட்டியான பதம் வந்த வெல்லப்பாகு கரைசலில், அடுப்பில் இந்த பக்கம் நன்றாக குறைய வேக வைத்த அரிசி பருப்பு கலவையை எடுத்து சேர்த்து நன்றாக கிளறி விடுங்க,

     அடி பிடிக்காமல் பதமாக கிளரும் விதத்தில் அதன் சுவை கூடும். 

  • அரிசி பருப்பு கலவை நன்றாக வெல்லப்பாகில் ஒன்றாக கலந்த பிறகு, இறக்கி வைக்கும் பக்குவம் வருவதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் முன்னால் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து கிளறுங்க,
      இதில் பச்சை கற்பூரம் விருப்பம் இருந்தால் மட்டுமே சேர்க்கலாம். ஏனெனில் கோயில் பிரசாதத்தில் இதனை சேர்ப்பார்கள்.

  • இறுதியாக நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்த முந்திரி, பாதாம் பருப்புகளையும், வறுக்காத பச்சை திராட்சைகளையும் [ அதாவது கிஸ்மிஸ் ] பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்க,
    அவ்வளவுதான் கோயில் பிரசாத சர்க்கரை பொங்கல் ரெடி... 

குறிப்பு:
சூடாக சாப்பிட எடுக்கும் பொழுது அதன் மேல் சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும்.

.

Tag,
kovil sarkarai pongal, கோவில் சர்க்கரை பொங்கல், sarkarai pongal, inippu pongal, pongal, thamilar thirunal sarkarai ponga, Tamil festival sweet Pongal. சர்க்கரை பொங்கல், இனிப்பு பொங்கல், வெல்லப் பொங்கல்,

.

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.