கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி
பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! :
பூசணிக்காய்னாலே சில பேருக்கு உடனே சாம்பார், கூட்டு இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், பூசணிக்காயை வைத்து இப்படி ஒரு கறி செய்து பாருங்க… சாதத்துக்கு ரொம்பவே அருமையாக இருக்கும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் மணத்தோடு, தேங்காய் சேர்த்து கேரளா ஸ்டைலில் செய்யும்போது பூசணிக்காயோட சுவையே வேற லெவல்ல இருக்கும்.
எனக்கு பூசணிக்காய் வாங்கும்போதெல்லாம் இதுதான் ஒரு எண்ணம் வரும். நல்ல பழுத்த பூசணிக்காய் இருந்தா, அதோட இயற்கையான இனிப்பே கறிக்கு ஒரு நல்ல சுவையைக் கொடுத்துடும். அதிகமா மசாலா எதுவுமே தேவையில்லை. வீட்டுல இருக்கிற ஒரு சில பொருட்களை வைத்து சிம்பிளா செய்தாலே போதும். சாதத்துக்கு ஒரு நல்ல சைடிஷ் ரெடி.
சரி, வாங்க… இந்த பூசணிக்காய் கறியை எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- மஞ்சள் பூசணிக்காய் – சுமார் 500 கிராம், துண்டுகளாக நறுக்கியது
- சின்ன வெங்காயம் – 7
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – 1 கொத்து
- மஞ்சள் தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- துருவிய தேங்காய் – ¾ கப்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- கடுகு – ½ டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
[ நாம எப்பவும் கடலை எண்ணெய் தாங்க. ஆனா இது கேரளா ஸ்பெஷல், அதனால பயன்படுத்துற எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யாவே ஒரு தடவை இருந்துட்டு போகட்டுமே. சுவையும் எப்படின்னு பாருங்க. ]
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்முறை :
- முதல்ல பூசணிக்காயோட தோல், விதையெல்லாம் நீக்கிட்டு, நடுத்தர அளவுல துண்டு துண்டா நறுக்கிக்கோங்க,
- ஒரு மண்பானை அல்லது கனமான பாத்திரத்தை அடுப்புல வச்சு, கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காயவையுங்க,
- அதுல நறுக்கி வச்ச பூசணிக்காய், சின்ன வெங்காயம், நீளமா கீறின பச்சை மிளகாய், கறிவேப்பிலை போடுங்க,
- மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடுங்க,
- 1 கப் தண்ணி ஊத்தி மறுபடியும் கலந்து மூடி வையுங்க,
- பூசணிக்காய் நல்லா வேகுற வரைக்கும் மிதமான தீயில வேகவிடுங்க.
[ பூசணிக்காய் வெந்திருக்கணும், ஆனா ரொம்ப குழைஞ்சிடக் கூடாது. ] வேகறதுக்குள்ள மிக்ஸியில துருவின தேங்காய், சீரகம், போட்டு நல்லா மிருதுவா அரைச்சுக்கோங்க.
- பூசணிக்காய் நல்லா [ குழையாம ] வெந்ததும், அரைச்ச தேங்காய் கலவையை அதுல ஊத்தி மெதுவா கிளறி விடுங்க,
- [ தேங்காய் கலவை சேர்த்ததுக்கப்புறம் ரொம்ப நேரம் கொதிக்க விட வேண்டாம். கறி உடைந்து குழையாமல் லேசாக பிராட்டினாற் போல கிளறிவிடுங்க, அடிக்கடி கிளறுங்க,]
- கறி நிறம் மாறி நல்லா சூடாகி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைச்சிடுங்க.
தாளிப்பு
- அடுப்பில் தாளிப்பு பாத்திரம் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிய விட்டு தாளிங்க,
- ரெடி பண்ணி வச்சிருக்கிற தாளிப்பை பூசணிக்காய் கறி மேல ஊத்தி, மெதுவா ஒரு தடவை கலக்கிக்கோங்க.
அவ்வளவு தான் 'கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி' ரெடி! சாதத்துக்கு செம்மையான சைடிஷ்! 😋
.
Tags,
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி, பூசணிக்காய் கறி, பூசணிக்காய் குழம்பு, கேரளா சமையல், கேரளா உணவுகள், சாதத்திற்கு சைடிஷ், தேங்காய் பூசணிக்காய் கறி, பூசணிக்காய் ரெசிபி, ஈஸி கேரளா ரெசிபி, பாரம்பரிய கேரளா சமையல், சைவ சமையல், மதிய உணவு சைடிஷ், தேங்காய் சேர்த்த கறி, கோவை பேச்சு தமிழ் ரெசிபி, Kerala-style pumpkin curry, pumpkin curry, pumpkin stew, Kerala dishes in tamil, side dish for rice, coconut-based pumpkin curry, pumpkin recipe, easy Kerala recipe, traditional Kerala cooking, vegetarian cooking, lunch side dish, curry with coconut, Kovai-dialect recipe,
.
