• பால் 1/2 [ அரை ] லிட்டர்
  • டீத்தூள் 1.5 டேபிள் ஸ்பூன்
  • லேசாக மட்டும் தட்டிவைத்த சாறுடன் இருக்கும் இஞ்சி சிறிதளவு [ 1 லிட்டருக்கு 5 கிராம் அளவு இருக்கலாம் ]
  • தட்டிவைத்த ஏலக்காய் 1
  • சர்க்கரை [ சீனி ] 100 கிராம் பிடிக்கக்கூடிய ஒரு டம்பளருக்கும் சிறிது அதிகமாக…
  • அடுப்பை மீதமான தீயிலேயே வைத்திருக்க வேண்டும்.

  • அடுப்பில் டீ பாத்திரம் வைங்க, பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் தண்ணீர் சூட்டில் காணாமல் போகும் அளவுக்கு பாத்திரத்தை சூடு படுத்துங்க.
  • ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் எடுத்து, சூடாக்கிய பாத்திரத்தில் ஊற்றுங்க,
  • தண்ணீர் சூடானதும், [ சூடு என்றால் கொத்திக்கக் கூடாது. பபிள்ஸ் அதாவது காற்றுக்குமிழ்கள் நன்றாக தோன்றத்துவங்கிய உடன்,  எடுத்துவைத்த தண்ணீர் கலக்காத பாலை ஊற்றுங்க,
  • தண்ணீருடன் பாலும் சேர்ந்து சூடாகத்துவங்கும். அது நன்றாக கொதிக்கும் வரை ஒரு கரண்டியால் மென்மையாக கிளறிக்கொண்டே இருங்க, [ஆமாங்க பாலை அப்படியே கொதிக்கட்டும் என்று விட்டுவிடாமல், கிளறவேண்டும். அதுவும் மெதுவாக…]
  • மேலே ஆடை படிந்துவிடாதவாறு கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

  • பால் சூடாகிவிட்டது, இனி பொங்க ஆரம்பித்துவிடும் என்று உணரும்போது, எடுத்துவைத்த தேயிலையைப் போடுங்க,
  • எல்லா தேயிலையையும் போட்டவுடன் கலந்துவிடுவதை நிறுத்துங்க,
  • மிக லேசாக கொத்தித்து மேலே பொங்கிவரும்போது, பாலும், டீத்தூளும் ஒன்றாக கலக்கத் துவங்குவதை உணரலாம்.
  • இப்போது மீண்டும் கிளறிவிடுங்க,
  • டீத்தூள் போட்ட 3 நிமிடத்தில் எல்லாம் கொத்திக்கத்துவம். அடுப்பு மிதமாக எரிவதால், பொங்காமல் லேசாக கொத்தித்துக்கொண்டே இருக்கும்.

  • லேசாக மட்டும் தட்டிவைத்த சாறுடன் இருக்கும் இஞ்சியை இதில் போடுங்க,
  • தட்டிவைத்த ஏலக்காயைப் போட்டு நன்றாக கலந்து விடுங்க, 
  • மித தீயில் டீ லேசாக கொதித்துக்கொண்டே இருக்க, நீங்க கரண்டியில் லேசாக கிளறிக்கொண்டே இருங்க,
  • 1 நிமிடம் கழித்து எடுத்துவைத்த சக்கரையைப் போடுங்க, இனிப்பு கொஞ்சம் அதிகம் இருந்தால் நலம் என்று நினைத்தால் சிறிதே இன்னும் கொஞ்சம் சர்க்கரை சேர்க்கலாம்,
  • மீண்டும் கலந்துவிட்டுக்கொண்டே இருங்க,
  • ஒரு 2 நிமிடத்தில் சக்கரை டீயில் கரைந்து டீ தயாராகிவிடும்,
  • அதை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியில் வடிகட்டி, வைத்தால் டீ ரெடி.

மொத்தமே ஒரு 10 நிமிடங்களில் சுவை மிகுந்த டீ கிடைத்துவிடும்.

குறிப்பு :

பாலில் டீ சாறு இறங்கிய பிறகு இஞ்சியை போடும் போது, பாலின் சுவையும், தன்மையும் மாறாமல் இருக்கும். திரிந்தும் போகாது. 

Tags,

டீ, தேயிலை, coffee, காப்பி, pengalthalam, samayal, tasty tea, tea kadai tea,

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!