சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு

உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால் மட்டுமே உடனடி நிவாரணமாக நாமே என்ன செய்யலாம் என்பதை நாமே பார்க்கலாம்.

காரணம் மற்றும் தீர்வு

சாதாரணமாக கொஞ்சம் அதிகமாக ஜலதோஷம், சளி என்று வந்து அவதிப்படும்போது அதோடு தொடர்புடைய காதும் அதன் அழுத்தத்தினால் வலிக்க தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்று நாம் உணர தொடங்கினால், ஜலதோஷத்திற்காக நாம் எடுத்துக் கொள்ளும் ஆவி பிடித்தல் முறையிலேயே இந்த காது வலியும் குறைவதை காணலாம்.

அப்படியும் குறையவில்லை எனில் வலி நிவாரணிக்காக பாராசிட்டமால் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படும் சாதாரண வலிக்கும் பாராசிட்டமால் கொள்ளலாம். உடனடி நிவாரணையாக அந்த நேரத்திற்கு இந்த பாராசிட்டமால் செயல்படும். மருத்துவரிடம் போவதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் தற்காலிகத் தீர்வாக இருக்கும்.

வெதுவெதுப்பான நீரில், சுத்தமான பருத்தி துணியை நனைத்து, காதைச் சுற்றியுள்ள இடங்களில் லேசாக ஒத்தடம் கொடுப்பதும், இந்த காது வலிப் போக்குவதற்கான மற்றும் ஒரு வழி ஆகும்.

கொஞ்சமே கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை தாளிப்பு பாத்திரத்தில் எடுத்து, அடுப்பில் வைத்து லேசாக சூடேற்றவும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். ஆறு ஏழு பூண்டுகள் எடுத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விடுங்கள். பூண்டு நன்றாக நிறம் மாறி வரும்போது, அடுப்பில் இருந்து அந்த தேங்காய் எண்ணெய் இறக்கி ஆற விடுங்கள். ஆறிய தேங்காய் எண்ணெய்யை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். [ வடிகட்டிக் கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அதில் இருக்கும் சிறு சிறு கசடுகள் கூட வடிகட்டுதலில் தங்கி விடுவதால் காதினுள் பூண்டுத்தோல் செல்வது தடுக்கப்படுகிறது.] இவ்வாறு நன்கு ஆற வைத்த தேங்காய் எண்ணெயில் ஒரு மூன்று சொட்டு மட்டும் எந்த காதில் வலி இருக்கிறதோ அந்த காதில் விட வேண்டும். சிறிது நேரத்தில் எல்லாம் காதில் வலி குறைவத்தைக் காணலாம்.

காதில் அழுக்கு சேர விடுவதும் காது வலி வருவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வப்பொழுது காதில் உள்ள அழுக்குகளை ஓரளவுக்கு எடுத்துவிட்டு, காதை சுத்தமாக வைத்துக் கொள்வது, காதில் வலி வராமல் தடுக்கும் முறை ஆகும். [ காதில் உள்ள அழுக்குகளை முழுவதுமாக நீக்க வேண்டாம். ஏனெனில் வெளிக்காற்றில் இருக்கும் தூசிகளும், அழுக்குகளும் காதுக்குள் சென்று விடாமல் தடுப்பதற்கு இந்த காதினுள் இருக்கும் மெழுகு போன்ற அழுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது, அதனால் காதில் இருக்கும் அழுக்கை முழுவதுமாக நீக்க வேண்டாம் ]

திடீரென்று காதில் ஏற்படும் அடைப்பினாலும் காதில் வலி ஏற்படலாம்

1] இது பொதுவாக நம் குளிக்கும் போது தண்ணீர் காதினுள் செல்வதினால் ஏற்படுகிறது. நம் காதுக்குள் இருக்கும் மெழுகு போன்ற அழுக்கை நம் காதே அவ்வப்போது இயற்கையாகவே வெளியேற்றி விடுகிறது. நாம் பேசும்பொழுதோ, இல்லை எனில் தாடையை வெகுவேகமாக அசைக்கும் பொழுதோ தாடையோடு இணைந்து அந்த காது பகுதியில் இருக்கும் அந்த மெழுகு போன்ற அழுக்கு தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும். குளிக்கும் பொழுது நாம் அதனை இயல்பாகவே எடுத்து விடுவோம். ஆனால் காதினூல் எப்பொழுதும் இருக்கும் மெழுகு போன்ற அழுக்குடன், குளிக்கும் போது காதினுள் செல்லும் தண்ணீரும் சேரும் பொழுது அந்த இடத்தில் நீரில் அழுக்கு ஊறி திடீரென்று அந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அடைப்பு ஏற்படும் காரணத்தினால் தான் திடீரென்று நாம் வெகுவாக காது வலியை உணர்கிறோம். இந்த அடைப்பை நீக்க துணியோ, பஞ்சோ இல்லை கூர்மையான பொருள்களைக் கொண்டோ அந்த அடைப்பை நீக்கும் முயற்சியை செய்யக்கூடாது. இயற்கையாகவே காதில் உள்ள நீர் குறைந்து, உலரத் துவங்கியதுமே வலி மட்டுப்பட ஆரம்பிக்கும்.

2]   திடீரென்று காது அடைத்துக் கொள்வதற்கு காற்றும், இன்னொரு காரணமாக இருக்கிறது. பொதுவாக நம் குளிர் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது, வாகனம் விரைந்து செல்லும் போது காற்று நம் முகத்தில் அறைந்து செல்வது போன்ற நிலை ஏற்படுகிறது. அப்பொழுது வேகமாக அடிக்கும் காற்று காதினுள் ஏற்படுத்தும் அழுத்தத்தின் காரணமாக, காது வலி ஏற்படுகிறது. இது வராமல் தடுப்பதற்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது எப்பொழுதும் காது பகுதியை துணியால் மூடி விட்டுக் கொள்ளலாம். அவ்வாறு வலி வந்து விட்டால்,மருத்துவரிடம் செல்வதற்கு காலதாமதம் ஆகும் என்ற நிலை வரும்போது, வலி வந்த காதின் பின்புறமாக தோடு போடும் இடத்தில் சிறிதே குழிவாக இருக்கும் பகுதியில் மிக மெதுவாக விரலால் லேசாக விட்டு விட்டு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். இவ்வாறு அந்த இடத்தில் செய்யும் பொழுது காது வலி கொஞ்சம் குறைவதை காணலாம்.

குறிப்பு

காதினுள் இருக்கும் மிக மென்மையான பகுதிகள் சேதம் அடையாமல் காதுகளைச் சுத்தப்படுத்த முடியும் எனில் செய்யுங்கள். இல்லையெனில் இதற்கு மருத்துவரை அணுகுவதே மிகச்சிறந்த வழிமுறையாகும். வீட்டிலேயே நம் உடலினுள் இருக்கும் மற்ற உறுப்புகளுக்காக மூலிகை பொருட்களை நாம் எடுத்துக் கொள்வது போல, இந்த காது வலிக்கு எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. காது வலியைப் பொறுத்தவரை மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்வதே மிகவும் நல்லது.

Tags,
ear pain, ear pain in tamil, kaathu vali, kaathu adaippu, kaathil alukku seruthal, காது வலி, காது அடைப்பு, காதில் அழுக்கு,

.

pengalthalam

Recent Posts

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

3 days ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

3 days ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

4 days ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

4 days ago

உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் | முழுமையான வழிகாட்டி

. உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் படைப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான…

5 days ago

Soft Productivity: அதிகமாக உழைப்பது அல்ல… நிம்மதியாக முன்னேறுவதுதான் உண்மையான வெற்றி!

. Soft Productivity என்றால் என்ன? பகுதி 1: "எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான் நான் ஓய்வெடுப்பேன்..." இந்த ஒரு…

2 weeks ago

This website uses cookies.