மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா?
‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து தான் வருகிறது.’ ‘பூரி ஏன் உப்பவே இல்ல’ இவை சில நேரங்களில் காதில் விழும் சலிப்புகள் தான். இதை விட ‘பூரி வட்டமாவே வரல பா…’ ம் கூட சொல்லுவார்கள். என்ன செய்தால் பூரி மென்மையாக, சுவையாக பிய்த்து சாப்பிட எளிதாக இருக்கும்? – என்று பார்க்கலாமா?
தண்ணீர் அல்லது கை பொறுக்கும் மட்டும் உள்ள வெந்நீர் எடுத்து வைத்தோம் அல்லவா? அதை மொத்தமும் அப்படியே ஊற்றி விடக் கூடாது. சிறிது தண்ணீர் ஊற்றி உடனே ஒரு சில பிரட்டு, பிறகு மீண்டும் சிறிது தண்ணீர் மற்றும் சில பிரட்டு, என்று தண்ணீரை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க, இருக்க மாவு நம் கையில் உருள ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிடவேண்டும். [ ஒன்றுக்கு அரை என்ற கணக்கு என்றாலும் இந்த அளவு, மாவை பொறுத்து மாறுபடும். பொதுவாக சிறிதே சிறிது அதிகம் வேண்டுமானால் ஆகலாம்.]
மாவை அழுத்தமாக பிசையாமல் அதே நேரம் குளோப் ஜாமூனுக்கு பிசைவது போல மென்மையாகவும் இல்லாமல், சிறிது அழுத்தம் கொடுத்து உருட்டி உருட்டி பிசைய வேண்டும்.அவ்வப்போது கையில் சிறிது சமையல் எண்ணெயை எடுத்து தடவிக்கொண்டு பிசையலாம், [ மாவு கையில் ஒட்டாமல் இருக்கும்.] இப்போது உருட்டி வைத்த பூரி மாவு பளபளப்பாகவும், ஒரு விறல் வைத்து அழுத்தினால் லேசாக உள்ளே அமுங்கி விடும் பதத்திலும் இருக்கும். இதனை துணி கொண்டு மூடி வைத்துவிடுங்க.
சிறிது நேரம் கழித்து, [ ரொம்ப நேரம் வேண்டாம். உப்பி வராது.] மூடி வைத்த மாவை தேய்க்க ஆரம்பிக்கலாம்.
வட்டமாக வர : இது மிகவும் எளியது தான். முனை கூறாக உள்ள ஒரு சிறிய டிபன் பாக்ஸ் மூடியை எடுத்து, தட்டையாக இட்டு வைத்த பூரி மாவில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி, வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மாவை எடுத்துவிட்டால், மூடியின் உள்ளே வட்ட வடிவ பூரி மாவு இருக்கும். இட்டு வைத்த பூரி மாவை வெகு நேரம் காற்றில் வைத்த பின் எண்ணெயில் போடக்கூடாது. பூரி உப்பி மென்மையாக வராது. எனவே பூரி மாவை வட்டமாக இட்டவுடன் விரைவாக அவற்றை எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். [ பூரி அதிக நேரம் எண்ணெயில் இருக்க வேண்டாம். இதனால் பூரி உள்ளே வெந்திருக்குமா? என்ற சந்தேகமும் வேண்டாம். சில நொடிகளிலேயே பூரி கண்டிப்பாக வெந்து விடும். ] அவ்வளவு தான், சாப்பிட மென்மையான, வட்டமான பூரி ரெடி. செய்ய செய்ய செய்யும் முறையும் தெளிவு படும், விரைவாக செய்யவும் வந்துவிடும்.
Tags,
puri suduvathu eppadi?, poori masala, poori seivathu eppadi, poori masala seivathu eppadi, uppalana poori, puri masala, பூரி மசாலா, பூரி செய்வது எப்படி, பூரி மசாலா செய்வது எப்படி, உப்பலான பூரி, பூரி மசாலா,
.
. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…
. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…
. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…
. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…
. உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் படைப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான…
. Soft Productivity என்றால் என்ன? பகுதி 1: "எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான் நான் ஓய்வெடுப்பேன்..." இந்த ஒரு…
This website uses cookies.