பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா

‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா மாதிரியே குழம்பு கலர்ல வருதுபா…’ என்று ‘பூரியே போடவேண்டாம் போ’ தள்ளி வைத்துவிட்டீர்களா?

‘உணவகத்தில் மட்டும் பூரிக்கு மசாலா எப்படி இப்படி ஒரு சுவையில் இருக்கிறது?’ – என்று யோசனை நம்மில் பலருக்கு உண்டு தானே. கீழே உள்ள படிநிலைகள் படி இந்த செய்முறையைச் செய்து பாருங்களேன்…அதையும் ரசித்து செய்து பாருங்கள். நீங்கள் விரும்பியது போல சுவையாக உங்களுக்கும் வரும். அதை அடிக்கடி செய்தால், உங்களால் விரைவாக குறைந்த நேரத்தில் கூட பூரியையும், மசாலாவையும் செய்து அசத்த முடியும். செய்முறைக்கு போகலாமா?

உருளைக்கிழங்கு மசாலா

மசாலாவிற்கு தேவையானவை
  • மிக லேசாக உப்பும், மஞ்சள் தூளும் போட்டு வேக வைத்து, தோல் உரித்து, மசித்து வைத்த உருளைக்கிழங்கு,
  • தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத் தூள்,
  • கறிவேப்பிலை தேவையான அளவு,
  • துருவிய இஞ்சி 1 ஸ்பூன்,
  • பொடி செய்து வைத்த சோம்பு 1 ஸ்பூன், [ ஏற்கனவே வீட்டில் சோம்பு – ஐ மிக்ஸியில் போட்டு ஓரளவுக்குத் தூள் செய்து வைத்திருங்கள். எந்த விதமான மசாலாவிற்கும் தூவி விட பயன்படுத்திக்கொள்ளலாம்.]
  • பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப,
  • நீளமாக நறுக்கிய வெங்காயம் 3 அல்லது 4
  • மஞ்சள் தூள் சிறிது
  • தூள் உப்பு, [ கல் உப்பு சமைக்கும் போது கரைய நேரம் எடுக்கும். இதற்கு தூள் உப்பே சரி ]
  • பொட்டுக்கடலையைப் பொடித்து வைத்த தூள் தேவைக்கு ஏற்ப, [ குறைந்தது 1 டேபிள் ஸ்பூன். உருளைக்கிழங்கு மசித்து சேர்ப்பதால் அதனாலும் கிரேவி கெட்டி படுவதால் நீங்கள் உங்கள் தேவைக்கு எடுத்துக்கொள்ளவும். நான் ஒரு டம்ளரில் 1/4 டம்ளர் பொட்டுக்கடலை தூள் எடுத்தால், அதிலேயே நீர் விட்டு கலக்க எனக்கு இலகுவாக இருக்கும்.]

செய்முறை

  • ஒரு வாணலியில் சிறிது சமையல் எண்ணெய் ஊற்றி காய விடுங்க,
  • அடுப்பை மிதமான தீயில் எரிய விடுங்க,
  • தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளிங்க, [ சிகப்பு மிளகாய் தாளிப்புக்கு வேண்டாம்.]
  • கறிவேப்பிலையை ஒடித்தும் கிள்ளியும் போட்டு வதக்குங்க,
  • பொடித்து வைத்த சோம்பு தூளைத் தூவி விடுங்க,
  • [ கேரட் துருவலில் ] துருவி வைத்த இஞ்சியை போட்டு லேசாக வதக்குங்க,
  • வெட்டி வைத்த பச்சை மிளகாய்களைக் காரத்திற்கு ஏற்ப போட்டு மீண்டும் வதக்குங்க,
  • ஓரளவுக்கு வதங்கியதும் நீள நீளமாக வெட்டி வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க,
  • அதோடு கூட மஞ்சள் தூள் சிறிது போட்டு, வதக்குங்க,

[ வெங்காயமும் உருளைக்கிழங்கும் அதிகமாக இதில் சேர்ப்பது நல்லது. பூரி மசாலா நீர்க்க குழம்பு போல இல்லாமல், கிரேவி மாதிரி பூரி மசால் இருப்பதால், சாப்பிடும் போது சட்டென்று காலி ஆகிவிடும். பிறகு செய்துவைத்த நமக்கு வெறும் பூரி மட்டுமே தான் இருக்கும். அந்த பரிதாபம் வேண்டாம். அதனால் அதிகமாகவே போட்டு வதக்குங்க ]

வெங்காயம் வெந்து விட வேண்டும், அதே நேரம் நிறமும் மாறாமல் அதாவது பிரௌன் கலராக மாறாமல் இருக்க வேண்டும். அடுப்பை மிதமாக தீயில் வைத்து கிளறும் போது, வெங்காயமும் வெந்து, கலரும் மாறாமல் இருக்கும்.
  • வெங்காயம் வதங்கியதும், மசித்து வைத்த உருளைக்கிழங்குகளை அதில் போட்டு பிரட்டி விடுங்க,
  • பிராட்டியை படியே 1/2 நிமிடம் கழித்து, தேவையான தண்ணீர் ஊற்றி கலக்கிவிடுங்க, [ தண்ணீர் தேவைக்கு மட்டுமே. உருளைக்கிழங்கு ஏற்கனவே வெந்திருப்பதால், நேரம் எடுக்காது.]
  • தண்ணீரும் உருளைக்கிழங்கும் நன்கு கலந்ததும், இப்போது பொடித்து வைத்த பொட்டுக்கடலை மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலக்கி, பிறகு அதனை அடுப்பில் உள்ள க்ரேவியில் சுற்றி ஊற்றி, கலந்து விடுங்க.
  • இப்போது தேவையான தூள் உப்பைப் போட்டு, கலந்து கொதிக்க விடுங்க.
     அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி அருகிலேயே இருந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 
  • 1 நிமிடத்தில் எல்லாம் கிரேவி பதத்தில் இருக்கும் ஊற்றிய தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.
  • அடுப்பை நிறுத்தி இறக்கிடுங்க.
        அவ்வளவே தான். அட்டகாசமான சுவையில், ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெடி.

Tags,

poori masala, poori seivathu eppadi, poori masala seivathu eppadi, uppalana poori, puri masala, பூரி மசாலா, பூரி செய்வது எப்படி, பூரி மசாலா செய்வது எப்படி, உப்பலான பூரி, பூரி மசாலா,

.

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.