
நிலக்கடலை தேங்காய் சட்னி
நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய் சட்னியை விட, கொஞ்சம் வித்தியாசமாக அதில் நிலக்கடலையும் சேர்த்து ஒரு சட்னியை செய்து பார்ப்போமா சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யத் தோன்றும். தேங்காய் சட்னியை வெறுக்கும் குழந்தைகள் கூட, இந்த சுவையை விரும்புவார்கள். இந்த நிலக்கடலை தேங்காய் சட்னியை எப்படி செய்ய வேண்டும்? என்று பார்ப்போம், வாருங்கள்.
தேவையானவை
- சமையல் எண்ணெய்
- நிலக்கடலை 1/2 கப்
- தேங்காய் 1/2 கப்
- கறிவேப்பிலை
- புதினா இலைகள்
- பச்சை மிளகாய்கள் 4
- பொட்டுக்கடலை 1/4 கப்
- புளி சிறிது மட்டும் தேவையான அளவுக்கு
- உப்பு தேவையான அளவுக்கு
- சின்ன வெங்காயம் சிறியதாக நான்கைந்து
- கொத்தமல்லி தழை சிறிது காம்புடன்
நிலக்கடலை தேங்காய் சட்னி செய்தல்
- அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெயை ஊற்றுங்க,
- அதில் அரை கப் அளவுக்கு நிலக்கடலை போட்டு, மிதமான தீயில் எரிய விட்டு வதக்குங்க,
- ஓரளவுக்கு நிறம் மாறாமல் வெந்த பிறகு, அதில் சில கருவேப்பிலை இலைகளையும், புதினா இலைகளையும் சேருங்க,
- பிறகு சிறிது சிறிதாக வெட்டி வைத்த பச்சை மிளகாய்களையும் சேருங்க, வதக்குங்க, [ நிறம் மாறாமல் வதக்க கவனமாக வேண்டும். இல்லையெனில் சுவை மாறிவிடும். ]

பச்சை மிளகாயை போட்டோம் இல்லையா? அந்த பச்சை மிளகாய் நிறம் மாறாமல் லேசாக மேல் பகுதியில் வெள்ளை நிறம் வரும் அளவுக்கு வதக்குங்க.
- அடுப்பு மிதமான தீயிலேயே இருக்கட்டும்.
- ஓகே, இதில் கால் கப் அளவுக்கு இப்பொழுது பொட்டுக்கடலையை சேருங்க கலந்து விடுங்க, [ கவனம் கலந்து விடுங்கள் வறுக்காதீர்கள்.]
- இதில் இப்பொழுது புளி சிறிதளவு மட்டும் எடுத்து சேருங்க, கலந்து விடுங்க,
- பிறகு அரை கப் அளவுக்கு துருவி வைத்த தேங்காய் துருவலைப் போட்டு அதையும் கலந்து விடுங்க,
- கலந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மேலும் லேசாக கிளறி விடுங்க, ஆறவிடுங்க.
அரைத்தல்
- நன்றாக ஆறியதும் அதை மிக்ஸியில் எடுத்து போடுங்க,
- உப்பு தேவையான அளவுக்கு அதிலேயே போடுங்க,
- சிறியதாக இருக்கும் சின்ன வெங்காயத்தை ஒரு நாலைந்து எடுத்து அதில் போடுங்க, [ சட்னிக்கு இது மிகச்சுவை கூட்டும்.]
- ஒருமுறை தண்ணீர் விடாமல் அரைத்து விட்டு, மீண்டும் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைங்க,

தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது துவையல் பதத்திற்கு அடுத்த நிலையில் இருக்க வேண்டும்.
- இப்பொழுது சிறிது கொத்தமல்லி இலையை காம்புடன் போட்டு, அதையும் சேர்த்து அரைங்க.
- இப்போது அரைத்த சட்னியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து உங்களுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கலந்து விடுங்க.
தாளிக்க
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுத்தம்பருப்பு
- சீரகம்
- வரமிளகாய்
- கறிவேப்பிலை
- இப்போது தாளிக்க வேண்டும்.
- ஒரு தாளிப்பு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேவையான கடுகு போடுங்க,
- பொரிந்ததும், உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு போடுங்க,
- சீரகம் போடுங்க,
- இரண்டு மிளகாய் வத்தல் கிள்ளி போடுங்க,
- சிறிது கருவேப்பிலை இலைகளையும் போடுங்க.
- இந்த தாளிப்பை எடுத்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றுங்கள்.

அவ்வளவுதான் நிலக்கடலை தேங்காய் சட்னி ரெடி.
Tags,
நிலக்கடலை தேங்காய் சட்னி செய்வது எப்படி, நிலக்கடலை தேங்காய் சட்னி, தேங்காய் சட்னி, நிலக்கடலை சட்டினி, சட்னி செய்வது எப்படி, இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள, Chutney, Peanut Coconut Chutney, chatni seivathu eppadi,
.
