• ஒரு உருளை கிழங்கை முழுமையாக தோல் சீவிக் கொள்ளுங்கள்.
  • அதனை நீளநீளமாக குச்சி குச்சியாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
  • அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள்.
  • அதில் 2 ஸ்பூன் மைதா மாவை சேர்க்கவும்.
  • அதில் தேவையான அளவு சிறிது உப்பு, மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

  • நன்றாக, முழுவதுமாக அனைத்தும் கலக்கும் வகையில் சிறிது நேரம் பிசறி விடவும்.
  • அடுப்பில் அடி நீளமாகவும், கனமாகவும் உள்ள ஒரு வாணலியை வைத்து அதில் சுத்தமான எண்ணையை சிறிது ஊற்றி பாத்திரத்தின் அடி முழுவதும் படுமாறு தேய்த்துவிடவும்.
  • கலவையை அதில் போட்டு, பரப்பிவிடுங்கள்.
  • பாத்திரத்தை மூடி, அடுப்பை மீதமான தீயில் வைத்து, 3 நிமிடங்கள் மட்டும் வேக வைக்கவும்.
  • 3 நிமிடம் கழித்து, முட்டைக்கலவையைத் திருப்பிப் போட்டு,மீண்டும் பாத்திரத்தை மூடி, அடுப்பை மீதமான தீயில் வைத்து, 2 நிமிடங்கள் மட்டும் வேக வைக்கவும்.

  • அவ்வளவு தான். வேக வைத்த உருளை முட்டை அப்பத்தை எடுத்து அழகாக, வடிவாக வெட்டி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.

  • எளிமையான, சத்தான, சுவையான டிபன் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!