கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil

.

கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil

மிக சாதாரண [அவசர ] கேரட் சாதம்  செயல்முறை : 1

தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
கறிவேப்பிலை சிறிதளவு
காய்ந்த மிளகாய் 2,
நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு
உப்பு
துருவிய கேரட் தேவையான அளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய விடுங்க,
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு கிளறி விடுங்க, 
  • கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்குங்க, 
  • தேவையான உப்பு சேர்த்து வதக்குங்க,
  • துருவி வைத்த கேரட்டை போட்டு வதக்குங்க, 
  • இரண்டு நிமிடம் வதக்கி கேரட் வெந்ததும், உதிரியாக இருக்கும் வெள்ளை சாதத்தைத் தேவையான அளவுக்கு அதில் போட்டு பிரட்டி விடுங்க, 
  • முடிந்தால் கொத்தமல்லி இலையை தூவி இறக்குங்க.

 அவ்வளவுதான் கேரட் சாதம் ரெடி.

=====================================================

மதிய உணவுக்கான கேரட் சாதம்  செயல்முறை : 2

தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய்
கடுகு
சீரகம்
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
முந்திரிப்பருப்பு 5 or 6
கறிவேப்பிலை சிறிதளவு
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு
பெருங்காயத்தூள்
மஞ்சள் தூள்
உப்பு
துருவிய கேரட் தேவையான அளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றி காய விடுங்க,
  • கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்குங்க, 
  • கருவேப்பிலை சேர்த்து வதக்குங்க, 
  • நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க, 
  • பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்க, 
  • உப்பு சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டுங்க, 
  • துருவி வைத்த கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வதக்குங்க, 
  • உதிரியாக வேகவைத்து ஆற வைத்த வெள்ளை சாதத்தை அதில் போட்டு கலந்து விடுங்க, 
  • கிள்ளிய கொத்தமல்லி இலையைத் தூவி இரண்டு பிரட்டு பிரட்டி இறக்கங்க.
  • [ தேவைப்பட்டால் மேலே லேசாக எலுமிச்சம் அரை பழத்தில் சிறிதே சிறிதளவு பிழிந்து விடுங்க ]

    அவ்வளவுதான் கேரட் சாதம் ரெடி.

====================================================

அட்டகாசமான மதிய உணவுக்கான கேரட் சாதம் செயல்முறை : 3

தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
பிரிஞ்சி இலை 1
முழு ஏலக்காய் 2
முந்திரி பருப்பு 5 or 6
கறிவேப்பிலை சிறிதளவு
நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
சாம்பார் பொடி சிறிதளவு
நெய்
உப்பு
துருவிய கேரட் 1 கப்
துருவிய தேங்காய் சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றி காய விடுங்க,
  • ஏலக்காய் 2, பட்டை 1 துண்டு, பிரிஞ்சி இலை 1 போட்டு இரண்டு பிரட்டு பிரட்டுங்க, 
  • முந்திரி பருப்பு போட்டு கலந்து விடுங்க, 
  • கறிவேப்பிலை போடுங்க, 
  • நறுக்கிய வெங்காயம் போடுங்க, 
  • நறுக்கிய பச்சை மிளகாய் போடுங்க, வதக்குங்க, 
  • உப்பு போடுங்க கலந்து விடுங்க,
  • நறுக்கிய அல்லது துருவி வைத்த கேரட் போட்டு வதக்குங்க,
  • சிறிதளவு சாம்பார் பொடி தூவி கலந்துவிட்டு வதக்குங்க, 
  • கேரட் வெந்ததும், சாதத்தை அதில் கொட்டி கலந்து விடுங்க, 
  • நெய் சிறிதளவு சேர்த்து கலந்துவிடுங்க,
  • சிறிதளவு தேங்காய் பூவைப் போட்டு கலந்து விடுங்க, 
  • மேலே லேசாக எலுமிச்சம் அரை பழத்தில் சிறிதே சிறிதளவு பிழிந்து விடுங்க,
  • இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி இறக்குங்க.

       அவ்வளவுதான் அட்டகாசமான கேரட் சாதம் ரெடி.

.

Tags,
carrot rice in tamil, rice recipe in tamil, variety rice in tamil, lunch box recipes in tamil, lunch carrot sadam, carrot sadam, கேரட் சாதம்,

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top