.

மாம்பழ கேசரி செய்வது எப்படி?
தேவை :
ரவை 1 கப்
நெய் 1 கப்
ஏலக்காய் 1
கிராம்பு 1
பால் அரை கப்
மாம்பழம் 2 நன்கு பழுத்தது
சர்க்கரை முக்கால் கப்
குங்குமப்பூ கலந்த பால்
முந்திரி சிறிது
பாதாம் சிறிது
மாம்பழ கேசரி முன் தயாரிப்பு :
- இரண்டு மாம்பழத்தில் ஒரு மாம்பழத்தைத் தோல் சீவிவிட்டு, பழத்தை நன்கு கூழாக அரைத்து வையுங்க,
- ரவையை நிறம் மாறாத அளவுக்கு லேசாக வாசம் வரும் வரை வறுத்து வையுங்க,
- சிறிது பால் எடுத்து அதில் குங்குமப்பூ சிறிது போட்டு, கலந்து வையுங்க. [ தேவைப்பட்டால் மட்டுமே ]
- முந்திரி பாதாம் பருப்புகளை பொடித்து வையுங்க,
- ஏலக்காய் நன்கு பொடித்து வையுங்க,
மாம்பழ கேசரி செயல்முறை :
- அடுப்பில் ஒரு அடி அகன்ற வாணலியில் மூன்று கப் தண்ணீர் எடுத்து கொதிக்க வையுங்க,
- கொதிக்கும் நீரில் ஏலக்காயையும் கிராம்பையும் தட்டி போடுங்க,
- ஒரு கப் வறுத்த ரவையை அதில் லேசாக ஒரு பக்கம் கொட்டிக் கொண்டே, தண்ணீரைக் கிளறி விடுங்க,
- முழு ரவையையும் கொட்டிய பின், அதை தண்ணீர் வற்றும் வரை கிளருங்க,
- அதில் எடுத்து வைத்த பாலை ஊற்றி கிளருங்க,
- ரவையும், பாலும் நன்கு கலந்து வற்றி வரும்போது, முக்கால் கப் சர்க்கரையை அதில் கொட்டி கிளருங்க,
- பாதி கிளறும் போது குங்குமப்பூ கலந்த பாலை அதில் கொட்டி கிளருங்க,
- ஓரளவு லேசாக சுருண்டு வரும்போது, ஒரு கப் நெய் ஊற்றி கிளருங்க,
- இப்பொழுது நன்கு சுருண்டு வரும் பொழுது, அரைத்து வைத்த மாம்பழக் கூழை அதில் கொட்டி கிளருங்க,
- பொடித்து வைத்த முந்திரி பாதாம் துண்டுகளைத் தூவி விட்டு கிளருங்க,
- நன்கு பொடித்து வைத்த ஏலக்காய் தூள் சிறிதளவு தூவி கிளருங்க,
- பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி வைத்த மற்றொரு மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டுங்க,
- பின்னர் சூட்டோடு மற்றொரு பாத்திரத்திற்கு அந்த கலவையை மாற்றி விடுங்க.
அவ்வளவுதான் மாம்பழ கேசரி ரெடி
.
Tags,
மாம்பழ கேசரி செய்வது எப்படி?, கேசரி, மாம்பழ கேசரி, How to make Mango Kesari? Mango Kesari,
