
“இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க எள்ளு சாப்பிட வேண்டும் என்றும், உடல் பருமன் ஆனவர்கள் எடையை குறைக்க கொள்ளு சாப்பிட வேண்டும் என்றும், இதன் பொருள் ஆகும். இந்த பழமொழியில் இருந்தே ‘கொள்ளு எத்தனை பயன் உள்ளது நம் உடலுக்கு,’ என்பதை அறியலாம்.

கொள்ளு
உடலில் சேரும் கொழுப்பைத் தடுத்து, உடல் பருமனை இந்த கொள்ளு குறைக்கிறது. அதன்படி உடலின் எடை தானாக குறைகிறது. முக்கியமாக பெண்களுக்கு அடிவயிற்றில் சேரக்கூடிய கொழுப்பை கரைத்து, ‘கர்ப்பிணி பெண்களின் வயிற்றை போல’ அசௌகர்யமாக காணப்படுவதை தடுக்கிறது. இது போதாதா நாம் கொள்ளு – வை வைத்துக் கொண்டாட. ஆனால் இந்த கொள்ளு – வை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டாம். வாரத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் எடுத்துக் கொள்வதே நலம். இப்பொழுது கொள்ளு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போமா?
கொள்ளு சட்டினி
வறுத்தல்
- கொள்ளு பயிறு

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் வாணலியை வையுங்க,
- பாத்திரம் சூடேறியதும், கொள்ளு பயிறு கால் கப் அதில் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளுங்க,
- எடுத்து வேறு தட்டில் கொட்டி, ஆற வையுங்க.
வதக்கல்
- கொள்ளு பயிறு 1/4 கப்
- சின்ன வெங்காயம்
- பூண்டு
- வர மிளகாய்
- கறிவேப்பிலை
- பெருங்காயத்தூள்
- துருவிய தேங்காய்
- உப்பு
- புளி
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் வாணலியை வையுங்க,
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் அரை டீஸ்பூன் போடுங்க,
- 10 அல்லது 15 சின்ன வெங்காயத்தை போடுங்க,
- ஏழு எட்டு பூண்டு சேருங்க, வதக்குங்க,
- சின்ன வெங்காயம் நன்கு வதங்கியதும், ஏழு அல்லது எட்டு வரமிளகாய்க்களைச் சேருங்க,
- கருவேப்பிலைகளை ஒரு கை பிடி சேருங்க. வதக்குங்க,
- பெருங்காயத்தூள் சேருங்க,
- துருவிய தேங்காய் தேவையான அளவு சேருங்க,
- இவை எல்லாம் சேர்த்து பின்னர் தேவைக்கு உப்பு போட்டு வதக்குங்க,
- 1 அல்லது 2 நிமிடம் வதக்குங்க,
- நன்கு வதங்கிய பிறகு புளி சிறிது மட்டும் சேருங்க,
- ரெண்டு வதக்கு வதக்கி, எடுத்து ஆற வையுங்க.
அரைத்தல்

- ஏற்கனவே நன்கு ஆறிய கொள்-ஐ முதலில் மிக்சியில் போட்டுத் தூளாக அரைத்திடுங்க,
- பின்னர் வதக்கி ஆற வைத்திருந்ததை அதில் போட்டு அதையும் சேர்த்து அரைங்க,
- சட்னிக்குத் தேவையான தண்ணி மட்டும் சேர்த்து அரைங்க,
- அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாத்துங்க.
தாளித்தல்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுத்தம் பருப்பு
- வரமிளகாய்
- கறிவேப்பிலை
- தாளிப்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்க,
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடுங்க,
- பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, ஒரு வரமிளகாய்யையும் சேர்த்து, கருவேப்பிலை உருவி போட்டு தாளிங்க,
- தாளித்ததும் சட்னியில் எடுத்து கொட்டுங்க.
அவ்வளவுதான் கொள்ளு சட்னி ரெடி.
உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் கீழே உள்ள கமெண்ட் பெட்டியில் எழுதுங்க தோழமைகளே.
Tags,
கொள்ளு சட்டினி செய்வது எப்படி, கொள்ளு, கொள்ளு சட்டினி, kollu, kollu chatni, kollu sattini, kollu chatini seivathu eppadi, kollu chatni suvaiyaaga seivathu eppadi,
.
