நமக்கு வரும் இருமல்களில் சில நேரங்களில் சளி இருமல் ஆக இல்லாமல் வெறும் வறட்டு இருமல் ஆக தொண்டையில் லேசான வலியுடன் வரும். இப்போதெல்லாம் இருமல் மருந்தை நம்பி குழந்தைகளுக்கு கொடுக்க இயலுவதில்லை. இருமல் மருந்தை பெரியவர்கள் அருந்தினாலே புத்தி ஒரு நிலையில் இல்லாமல், மந்தமாக இருப்பதை உணரலாம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், பாங்கு அடித்தது போல ஒருவித போதை நிலையிலேயே இருப்பதை உணரலாம். தெளிவாக வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல் மருந்துகளிலேயே இந்த நிலை என்றால், பரிந்துரை இல்லாமல் கடைகளில் வாங்கும் மருந்துகளை அருந்தும் குழந்தைகளின் நிலை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இருமல் மட்டும் வந்தால் அதற்காக மட்டுமே ஆன வைத்தியத்தை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும்.

அவசர வைத்தியம்

  • வெதுவெதுப்பான தண்ணீரில், தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தொண்டை பகுதியில் முழுவதுமாக படும்படி அருந்த வேண்டும்.
  • இரண்டு மிளகு, நாலு அரிசி சேர்த்து வாயில் போட்டு நன்கு மென்று சிறிது சிறிதாக அந்த சாற்றை தொண்டைக்குள் இறக்கி வந்தால், அந்தச் சாறு உள்ளே போகும்பொழுது தொண்டையில் இருக்கும் அரிப்பு குறைந்து இருமல் குறைவதை காணலாம்.
  • ஒரு வெத்தலையில் இரண்டு சீரகம், ஏழு மிளகு, ஒரு ஏலக்காய், கொஞ்சம் தேன் கலந்து, மடித்து, வாயில் போட்டு நன்றாக மென்று தின்றுவர வரட்டு இருமல் சரியாகும்.
  • அட ஏலக்காய் பிடிக்கலையா???? அப்போ ஒரு வெத்தலையில் வெறும் மிளகு மட்டும் வைத்து மென்று சாப்பிட்டு பாருங்க.
  • சாதம் வடித்த காஞ்சி ஒரு டம்ளர் எடுத்துக்கோங்க, [ ஒரு முறை கஞ்சியை எடுத்துவைத்து, குடிக்கும் போது, தேவையான அளவு எடுத்து சுடவைத்து பயன்படுத்தலாம்.] அதனுடன் பனங்கற்கண்டு சிறிதளவு சேர்த்து கலந்து காலை மாலை குடிங்க, [ சூடான கஞ்சியில் பனங்கற்கண்டு சேருங்க.]

தொடர் இருமல்

  • ஒரு ஸ்பூன் மிளகை எடுத்து, அடுப்பில் வெறும் வாணலியில் நன்கு வறுத்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து ஊற்றி, அந்த நீர் அரை டம்ளராக சுருங்கும் வரை நன்றாகக் காய்த்து, அந்த நீரை சிறிது சிறிதாக அதாவது சிப்சிப்பாக தொண்டையில் முழுவதும் படும் வகையில் குடித்து வந்தால், தொடர் இருமல் சரியாகும்.
  • அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு இரண்டையும் பொடி செய்து வைத்து, டீ போடும் போது, அதில் அரை டீஸ்பூன்னுக்கும் மிகக் குறைவாக எடுத்துக் போட்டு, கொதிக்க வைத்து தொடர்ந்து அருந்தி வந்தால், தொடர் இருமல் சரியாகும்.

  • சித்தரத்தை, அதிமதுரம், ஓமம் ஆகியவற்றை சிறிது சிறிதாக மிகக் கொஞ்சம் மட்டும் எடுத்து, அதனுடன் ஒரு இன்ச் மட்டும் லவங்கப்பட்டை சேர்த்து நன்றாக பொடித்து, அந்த பொடியை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடுங்கள். நன்கு கொதிக்கும் போது, இரண்டு வெற்றிலையை எடுத்து கிள்ளி அதில் போட்டு, மேலும் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கசாயத்தை காலை இரவு என்று உணவுக்கு முன்னரே அருந்திவிட்டு, நன்கு நேரம் எடுத்து பிறகு சாப்பிட வேண்டும். இடைப்பட்ட நேரங்களிலும், வயிற்றில் உள்ள உணவு செரித்த பிறகும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து அரை மாதம் எடுத்துவந்தாலே தொடர் இருமல் குறைந்து வருவதை உணரலாம்.

கைக்குழந்தைகளுக்கு

  • கெமிக்கல் கலக்காத சுத்தமான தேன் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக்கோங்க.
  • நன்கு மாவு மாதிரி பொடித்து வைத்த ஏலக்காய் தூளில் ஒரே ஒரு சிட்டிகை அளவு மட்டும் எடுத்து அந்த கிண்ணத்தில் உள்ள தேனில் நன்கு அதே நேரம் மென்னையாக கலந்துவிடுங்க,
  • இந்த கலவையை இருமலால் அவதி படும் குழந்தைகளுக்கு வெறும் வாயில் சாப்பிடக் கொடுங்க,
  • தினமும் ஒரு நான்கு அல்லது ஐந்து முறை கொடுங்க,
  • வறட்டு இருமல் சுத்தமாக நின்று விடும்.

[தேன் தொண்டையில் நன்கு படவேண்டும் என்பதால் இதனைக் கொடுத்ததும் வழக்கம் போல தண்ணீர் எதுவும் சிறிது நேரம் கொடுக்கவேண்டாம். ஒரு ஏனெனில் தண்ணீர் இந்த கலவையைத் தொண்டையில் தூங்கவிடாமல் வயிற்றுக்குள் கொண்டுசென்றுவிடும். இதை வயதில் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.]

Tags,

irumal, thodar irumal, varattu irumal, Cough, persistent cough, dry cough, இருமல், தொடர் இருமல், வறட்டு இருமல்,

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!