சிற்றுண்டி

மாம்பழ கேசரி செய்வது எப்படி?

.

மாம்பழ கேசரி செய்வது எப்படி?

தேவை :

ரவை 1 கப்
நெய் 1 கப்
ஏலக்காய் 1
கிராம்பு 1
பால் அரை கப்
மாம்பழம் 2 நன்கு பழுத்தது
சர்க்கரை முக்கால் கப்
குங்குமப்பூ கலந்த பால்
முந்திரி சிறிது
பாதாம் சிறிது

மாம்பழ கேசரி முன் தயாரிப்பு :
  • இரண்டு மாம்பழத்தில் ஒரு மாம்பழத்தைத் தோல் சீவிவிட்டு, பழத்தை நன்கு கூழாக அரைத்து வையுங்க,
  • ரவையை நிறம் மாறாத அளவுக்கு லேசாக வாசம் வரும் வரை வறுத்து வையுங்க,
  • சிறிது பால் எடுத்து அதில் குங்குமப்பூ சிறிது போட்டு, கலந்து வையுங்க. [ தேவைப்பட்டால் மட்டுமே ]
  • முந்திரி பாதாம் பருப்புகளை பொடித்து வையுங்க,
  • ஏலக்காய் நன்கு பொடித்து வையுங்க,

மாம்பழ கேசரி செயல்முறை :
  • அடுப்பில் ஒரு அடி அகன்ற வாணலியில் மூன்று கப் தண்ணீர் எடுத்து கொதிக்க வையுங்க,
  • கொதிக்கும் நீரில் ஏலக்காயையும் கிராம்பையும் தட்டி போடுங்க,
  • ஒரு கப் வறுத்த ரவையை அதில் லேசாக ஒரு பக்கம் கொட்டிக் கொண்டே, தண்ணீரைக் கிளறி விடுங்க,
  • முழு ரவையையும் கொட்டிய பின், அதை தண்ணீர் வற்றும் வரை கிளருங்க,
  • அதில் எடுத்து வைத்த பாலை ஊற்றி கிளருங்க,
  • ரவையும், பாலும் நன்கு கலந்து வற்றி வரும்போது, முக்கால் கப் சர்க்கரையை அதில் கொட்டி கிளருங்க,
  • பாதி கிளறும் போது குங்குமப்பூ கலந்த பாலை அதில் கொட்டி கிளருங்க,
  • ஓரளவு லேசாக சுருண்டு வரும்போது, ஒரு கப் நெய் ஊற்றி கிளருங்க,
  • இப்பொழுது நன்கு சுருண்டு வரும் பொழுது, அரைத்து வைத்த மாம்பழக் கூழை அதில் கொட்டி கிளருங்க,
  • பொடித்து வைத்த முந்திரி பாதாம் துண்டுகளைத் தூவி விட்டு கிளருங்க,
  • நன்கு பொடித்து வைத்த ஏலக்காய் தூள் சிறிதளவு தூவி கிளருங்க,
  • பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி வைத்த மற்றொரு மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டுங்க,
  • பின்னர் சூட்டோடு மற்றொரு பாத்திரத்திற்கு அந்த கலவையை மாற்றி விடுங்க.

    அவ்வளவுதான் மாம்பழ கேசரி ரெடி

.

Tags,
மாம்பழ கேசரி செய்வது எப்படி?, கேசரி, மாம்பழ கேசரி, How to make Mango Kesari? Mango Kesari,

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.