
‘அப்பொழுது அந்த வழியை என்னால் தாங்கவே முடியவில்லை. என்னால் இயல்பாக எளிதான வேலையை கூட செய்ய முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கிறது. நான் அலுவலகத்திற்கு, அல்லது படிப்பதற்கு மற்றும் வெளி வேலைகளுக்கு செல்லும் நிலையில் இல்லை. மேலும் என்னால் தாங்க முடியாத அளவிற்கு வலியும் வேதனையும் நான் அனுபவிக்கிறேன்,’
என்று புலம்புகிறீர்களா? இல்லை உங்களின் அருகில் இந்த புலம்பல் கேட்டு இதற்கு என்ன தான் வழி? என்று தோன்றுகிறதா? கீழே பொதுவாக மருத்துவர்கள் மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களும் தன் அனுபவத்தில் கூறி இருப்பதை எழுதி இருக்கிறேன். ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற வேகத்தில் ஒவ்வொன்றாக என் 2 பெண் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் கொடுத்து வந்தவை தான் இவைகள். [ எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. ஒரு நாளும் வலி என்று நான் முனங்கியது இல்லை. ஆனால் என் குழந்தைகளுக்கு மட்டும் ‘எப்படி இது வந்தது?’ என்று வருத்தமாகவும்,ஆச்சரியமாகவும் தான் இருக்கிறது.] நீங்களும் உங்களுக்கு எந்த வகை கேட்கிறதோ அதை முயற்சித்துப் பாருங்கள்.
- சுடுதண்ணீர் குடிப்பது அந்த நேர வலியை உடனடியாக குறைக்கும்.
- சிறிது வெந்தயத்தை எடுத்து சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை வெந்தயத்துடன் சேர்த்து குடிங்க.
- சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிங்க.
- இதில் சரியாகவில்லையா?…சீரகம் மட்டும் அல்லாது அதனுடன் கிராம்பு, சோம்பு கலந்து கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து குடிங்க.
- ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் சோம்பு, சீரகம்,மல்லி விதை மூன்றையும் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் தோல் நீக்கிய சிறு துண்டு துருவிய இஞ்சியையும் கலந்து அந்த நீரைக் கொதிக்க வைத்து, அந்த நீர் வெதுவெதுப்பான, பொறுக்கக்கூடிய சூட்டில் இருக்கும் போது, அதில் ஒரு ஸ்பூன் கருப்பட்டி அல்லது தேன் கலந்து குடிங்க.
- இஞ்சி, துளசி டீ போன்ற மூலிகை தேநீர் சூடாக அருந்துங்க.

சீமைக் காட்டுமுள்ளங்கி பூ
- இலவங்கப்பட்டை, எலுமிச்சை, காட்டுமுள்ளங்கி மற்றும் செம்பருத்தி தேநீர் கூட அருந்தலாம். பலன் கிடைக்கும்.
- வாழைப்பழம் மற்றும் சாக்லேட் சாப்பிடலாம். வலி குறையும். ஆனால் இனிப்புக்கு உதிரப்போக்கு சிறிது அதிகப்பட வாய்ப்புண்டு.
- சிறிது நல்ல பசுமையாக உள்ள முருங்கை இலைகளை பறித்து, நன்கு அலசி அதை பிழிந்து சாறு எடுத்து அருந்தி பாருங்கள். பலன் கிடைக்கும்.
- இரண்டு பெரிய வெத்தலையை எடுத்து, காம்புடன் மென்று முழுங்கவும். சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.
- கட்டிப் பெருங்காயத்தை சிறிது மட்டும் எடுத்து நல்ல தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கவும்.

இந்துப்பு
- இந்துப்பு – ஐ ஒரே ஒரு சிட்டிகை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி குடிக்கவும்.
- நல்லெண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் ஒவ்வொரு சொட்டு எடுத்து, உள்ளங்கையில் சூடு பறக்க தேய்க்கும் பொழுது சிறிது நேரத்தில் வெள்ளையாக பிசின் மாதிரி ஒரு பொருள் வரும். அதனை நம் உடலின் தொப்புளை சுற்றி உள்ள பகுதியில் நன்கு தேய்த்து விட்டால் சிறிது நேரத்தில் வலி குறைவதை காணலாம்.
- கீழ் வயிற்றில் ஒரு heating pad அதாவது ‘வெப்பமூட்டும் திண்டு‘ வைத்து வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கலாம். சுடுநீரில் குளிப்பதோ அல்லது சுடுநீரில் உடலை அமிழ்த்தி வைப்பதோ உடனடியாக மாதவிடாய் வலியைக் குறைக்கின்றன.
- நாம் வலியில் இருக்கும் போது, அடிவயிற்றின் தசைகளை இலகுவாக்க, தளரச் செய்ய அந்த இடங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் வகையில் சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. யோகா மற்றும் நடப்பது போன்ற லேசான, மென்மையான உடற்பயிற்சி கூட அந்த வலியை குறைத்து, மனதிற்கு புத்துணர்ச்சியை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இன்னும் கூட ஏதேனும் வழிகள் தெரிந்தால் இந்த பகுதியில் கொடுக்க முயற்சிக்கிறேன். உங்கள் யோசனைகளையும், அனுபவத்தையும் நீங்க கூற விரும்பினால் கீழே கமெண்ட் பகுதியில் கூறலாம்.
Tags,
period pain,maathavidai vali, veettu vaithiyam, kai vaithiyam, vayitru vali, adivayitru vali, menses problem in tamil, Menstrual pain, Menstrual pain in tamil, மாதவிடாய் வலி,
.
