சைவம்

பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி?

பொட்டுக்கடலை சட்னி 

நம் இட்லி தோசைக்கு பொதுவாக காலை நேரம் என்றால் சாம்பார், குருமா என்று செய்வோம். இதுவே மாலை இரவு நேரம் என்றால் அவசரத்திற்கு அப்பொழுது என்ன தோன்றுமோ அந்த சட்னியை செய்து வைத்து விடவும் இல்லையா? அந்த நேரத்தில் அவசரமாக, அதேசமயம் சுவையாக செய்யக்கூடிய ஒரு சட்னி வகை தான் இந்த இந்த பொட்டுக்கடலை நிலக்கடலை சேர்த்து செய்யும் சட்னி. இது செய்வதற்கு எளிதானது, செய்யும் நேரமும் மிகவும் குறைவு, சுவையானதும் கூட.

பொதுவாக ‘பொட்டுக்கடலை நிலக்கடலை சட்னி’யை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இங்கு எனக்குத் தெரிந்த செய்முறை ஒரு இரண்டு மூன்று அளிக்கிறேன். உங்களுக்கு எது பிடித்தம் என்று பார்த்து நீங்கள் செய்யுங்கள்.

செய்முறை 1

  • பொட்டுக்கடலை 1/4 கப் ,
  • நிலக்கடலை ஒரு கைப்பிடி
  • எண்ணெய்
  • தேங்காய் துருவல் 1/4 மூடி
  • கடுகு,
  • பச்சை,மிளகாய் 4,
  • கறிவேப்பிலை
  • இஞ்சி
  • உப்பு,
  • புளி
  • கொத்தமல்லி தழை,
  • பெருங்காயத்தூள்

வறுத்தல்

பொட்டுக்கடலையும், நிலக்கடலையையும் சிலர் தனித்தனியாக வறுத்து ஒன்றாக இணைப்பார்கள். இங்கு நான் சேர்த்து வறுத்திருக்கிறேன்.

  • அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்திடுங்க,
  • வாணலி சூடாகியதும், எண்ணெய் ஊற்றாமல் வெறும் வாணலியில் 1/4 கப் பொட்டுக்கடலையைப் போட்டு லேசாக வறுத்திடுங்க,
  • லேசாக வறுபட்டதும், அதில் நிலக்கடலை ஒரு காய் பிடி போட்டு மேலும் வறுத்திடுங்க, ஆறவையுங்க.

அரைத்தல்
  • வறுத்து ஆறவைத்த பொட்டுக்கடலை மற்றும் நிலக்கடலையைப் போட்டுங்க,
  • தேங்காய் துருவல் ஒரு கைப்பிடி எடுத்து, அதையும் மிக்ஸியில் போடுங்க, தண்ணீர் ஊற்றாமல் லேசாக தூளாக அரைத்திடுங்க,

  • இதற்கு இடையில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிது மட்டும் கடுகு, பின்னர் பச்சை மிளகாய் பெரியதாக 2 அல்லது 3, பின்னர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு, பொரிந்ததும், அதையும் மிக்ஸியில் போடுங்க, தூளாக அரைத்திடுங்க, [தண்ணீர் ஊற்றாமல் தான் ]
  • அதில் இப்போது இஞ்சி ஒரு சிறு துண்டு, உப்பு, புளி சிறிது மட்டும் மிக்ஸியில் போடுங்க,
  • இப்போது சிறிது சிறிதாக தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்து அரையுங்க,
  • அதிலியேயே மேலும் சிறிது கொத்தமல்லி தழை, பெருங்காயத்தூள் போட்டு அதையும் அரைத்திடுங்க,
  • வேறு சட்னி பாத்திரத்தில் மாற்றுங்க.

தாளிப்பு

  • அடுப்பில் தாளிப்பு பாத்திரம் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிய விட்டு தாளிங்க,
  • தாளித்ததை அரைத்ததில் கொட்டி கலந்து விடுங்க.

அவ்வளவு தான் ‘பொட்டுக்கடலை நிலக்கடலை சட்னி’ ரெடி 


செய்முறை 2
  • சமையல் எண்ணெய்
  • பொட்டுக்கடலை கால் கப்
  • நிலக்கடலை சிறிது [ பொட்டுக்கடலையை விட குறைவாக ]
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  • வெந்தயம் இரண்டு [ எண்ணிக்கை ]
  • சின்ன வெங்காயம் 4
  • வர மிளகாய் 4
  • தேங்காய் துருவல் கால் கப்
  • கறிவேப்பிலை
  • புளிக்காத தயிர் இரண்டு டீஸ்பூன் [தேவை என்றால் மட்டும் ]

வறுத்தல் & வதக்கல்

  • அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு, அதில் வாணலியை வைங்க, வானொலி சூடேறியதும் அதில் மிகச் சிறிய அளவு சமையல் எண்ணெய் ஊற்றுங்க, அதில் கால் கப் பொட்டுக்கடலையை போட்டு லேசாக வறுத்து விடுங்க. [ பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்] நல்ல வாசனை வந்து, கலர் சிறிது மாறும். அப்போது எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றுங்க.
  • அதேபோல கால் கப்புக்கு குறைவாக நிலக்கடலையையும் எடுத்து, லேசாக மட்டும் சமையல் எண்ணெய் விட்டு வறுத்து வைத்துக் கொள்ளுங்க,
  • இப்பொழுது மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து லேசாக சமையல் எண்ணெய் ஊற்றி, அதில் முதலில் சிறிது கடுகு, ஒரு டீஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பு, இரண்டே இரண்டு வெந்தயம் மட்டும் சேர்த்து லேசாக வறுத்து விடுங்க,
  • பின்னர் அதில் நான்கு சின்ன வெங்காயத்தை போட்டு வறுங்க,
  • லேசாக வேறுபட்டதும் அதில் நான்கு வர மிளகாய்களை போட்டு வறுங்க,
  • நன்கு வறுபட்டதும், அதில் கால் கப் தேங்காய் துருவல்களை போட்டு லேசாய் கிளறி விடுங்க, தேங்காய் துருவல் பச்சை வாசனை போனதும், கருவேப்பிலை தேவையான அளவுக்கு போட்டு மீண்டும் வதக்கி விடுங்க,
  • இப்பொழுது வறுத்த அனைத்தையும் எடுத்து ஆற விடுங்க.

அரைத்தல்
  • இப்பொழுது வறுத்த அனைத்தையும் எடுத்து ஆற விடுங்க,
  • ஆறியதும் மிக்ஸியில் போடுங்க.
  • அதில் உப்பு தேவையான அளவுக்கு சேருங்க,
  • தண்ணீர் சேர்த்து அரைங்க,
  • [ கூடுதல் சுவைக்காக புளிக்காத தயிர் இரண்டே இரண்டு டீஸ்பூன் போட்டு அரைக்கலாம். உங்களுக்கு அது சரிபடவில்லை என்றால் விட்டு விடலாம்.]
  • தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்ததை பாத்திரத்திற்கு மாற்றி விடுங்க.

தாளிப்பு
  • அடுப்பில் தாளிப்பு பாத்திரம் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிய விட்டு தாளிங்க,
  • தாளித்ததை அரைத்ததில் கொட்டி கலந்து விடுங்க.

அவ்வளவு தான் ‘பொட்டுக்கடலை நிலக்கடலை சட்னி’ ரெடி 

Tags,

பொட்டுக்கடலை நிலக்கடலை சட்னி. பொட்டுக்கடலை சட்னி, நிலக்கடலை சட்னி, அவசர சட்னி, இட்லி தோசை தொட்டுக்கொள்ள, பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி, தேங்காய் பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி, பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி, how to make peanut chutney, how to make coconut peanut chutney, peanut chutney, peanut chutney with coconut,

.

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.