கோதுமை தோசை
அவசரத்திற்கு எதுவுமே சாப்பிட இல்லை என்றாலோ அல்லது இனி தான் சமையல் என்ன என்றே பார்த்து செய்து எப்போது சாப்பிட போறோமோ என்ற சலிப்பு வந்துவிட்டாலோ உடனே ‘எடுடா அந்த கோதுமைய…ஊத்துடா தோசைய…’ என்று எடுத்து, கரைத்து, ஊற்றுவதற்கு மிக மிக எளிதான சமையல், இந்த கோதுமை மாவில் ஊற்றி சுடும் தோசை தான். அதை தான் இங்கு பார்க்க போகிறோம்.
பொதுவாக கோதுமை மாவை மட்டும் சரசரவென்று எடுத்து சலித்து கொட்டி, உப்பு மற்றும் நீர் விட்டு கரைத்து வைத்து தோசை ஊற்றினாலும் அது கோதுமை தோசை தான். தொட்டுக்கொள்ள சுவையான சட்னி இருந்து விட்டால், இந்த வெறும் கோதுமை மாவு தோசை கூட மிக அருமையாகவே இருக்கும். ஆனாலும் சிறிது சிரமம் எடுத்து இந்த கோதுமை மாவில் இன்னும் சில சமையல் பொருட்கள் சேர்த்து, தோசையாக ஊற்றும் போது, இன்னும் ஒன்று இரண்டு தோசைகள் அதிகமாக வீட்டில் உள்ளோருக்கு உள்ளே இறங்கும். அப்படி சேர்க்கப்படும் பொருள்கள், விரும்பி சமையல் செய்யும் நபர்களுக்குத் தகுந்தாற் போல, அவர்களின் கற்பனைத் திறத்திற்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். நாமும் இங்கு அவற்றில் 2 அல்லது 3 செய்முறைகள் மட்டும் பாப்போம்.
பொதுவாக தோசையை ஊற்றும் போது நடுவில் ஊற்றி பக்க பகுதிக்கு இழுத்து விடுவோம். ஆனால் கோதுமை தோசையில் முதலில் பக்க பகுதில் சுற்றி ஊற்றிக் கொண்டு நடுவுக்கு வந்து நிறுத்த வேண்டும். அப்போது தான் தோசை இழுத்து சுற்றுவதற்கு வசதியாக இருக்கும், வட்டமாகவும் வரும். அவ்வளவு தான் ‘மொறுமொறு கோதுமை தோசை’ ரெடி
=============================================================
கோதுமை தோசைக்கு எப்பொழுதுமே மாவு ஓரளவுக்கு தண்ணியாக தான் இருக்க வேண்டும். 'தோசைக்குத் தானே' - என்று திக்காக இருக்க கூடாது. ஓரளவுக்கு நீர்க்க இருந்தால் தான் கோதுமை தோசை நன்றாக வரும். அவ்வளவு தான் ‘மொறுமொறு கோதுமை தோசை’ ரெடி.
=========================================================
பொதுவாக சர்க்கரை சுவை கூட்டுவதற்கும், முறுகல் தன்மை கிடைக்கவும் சேர்ப்பார்கள். அது அவசியம் இல்லை என்று சேர்க்காமல் விட்டாலும் விடலாம். தவறில்லை. இதில் ரவை சேர்க்கவில்லை அல்லவா...அதனால் மொறுமொறுப்பு வராது. அவ்வளவு தான் .’மெதுமெது கோதுமை தோசை’. ரெடி
===========================================================
அடிப்படையில் கோதுமை மாவையும் உப்பையும் மட்டும் வைத்து, ஒவ்வொருவரும் நம் கற்பனை திறமைக்கு ஏற்பவும், நமக்குத் பிடித்த விதத்திலும் பொருட்களை சேர்த்து தோசை ஊற்றலாம். தாளித்து கொட்டியும் தோசை ஊற்றலாம், வெறும் தோசையாக இல்லாமல் வெங்காயம் தக்காளி சேர்த்து கோதுமை அடையாக கூட ஊற்றலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
Tags,
godhumai maavil dosai suduvathu eppadi, godhumai dosai, godhumai ravai dosai, godhumai maavu ravai dosai, கோதுமை தோசை செய்வது எப்படி, How to make wheat dosa, கோதுமை தோசை, கோதுமை ரவை தோசை, கோதுமை தோசை வகைகள், godhumai dosai, kothumai thosai,
.
சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…
. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…
. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…
. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…
. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…
This website uses cookies.