சமையல்

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது. ஏனெனில் அவசரத்திற்கு இட்லி, தோசைக்கு சட்டென்று நாம் ரெடி பண்ணி வைப்பது தக்காளி சட்னி தான். அதே போல விருந்து என்றால் பலவகை சட்னியுடன் தக்காளி சட்னியும் சேர்த்து இருந்தால் தான் நிறைவே இல்லையா?. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சட்னியும் கூட. ஹோட்டல்களில் கூட ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக செய்து சுவையில் அசத்தி இருப்பார்கள். ஒவ்வொரு வீடுகளிலுமே இந்த தக்காளி சட்னி செய்யும் முறை வேறுபடுகிறது தான்.  

அடிப்படையில் தக்காளி சட்னியில் பயன்படுத்தப்படுவது தக்காளி, வெங்காயம், வர மிளகாய். இதனை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை சுவைக்காக சேர்த்து அவரவர்கள் பாணியில் செய்வார்கள். வெவ்வேறு விதமாக செய்வது என்றாலும் இந்த மூன்று அடிப்படை விஷயங்களையும் வைத்து செய்து வரும் இந்த தக்காளி சட்னியைக் குழந்தைகள் கூட தலை அசைத்து தான் வரவேற்கிறார்கள்.

எவ்வளவுதான் வேறு வேறு சுவைகளில் இந்த தக்காளி சட்னியை செய்தாலும், ஹோட்டல்களில் அளிக்கப்படும் தக்காளி சட்னியின் சுவையே தனிதான், இல்லையா?  அந்த மாதிரி சில ஹோட்டல்களில் சுவையுடன் செய்யப்படும் தக்காளி சட்னியின் ஒரு வகையை இங்கு நாம் பார்ப்போமா…

வதக்குதல்

  • அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காயவிடுங்க,
  • காய்ந்ததும் ஒரு 7 அல்லது 8 பூண்டுகளை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்குங்க,
  • வர மிளகாய்களை காரத்திற்கு தகுந்தவாறு [ 10 இருக்கலாம் ] போட்டு லேசாக இரண்டு வதக்கு வதக்குங்க,
  • துண்டுகளாக அறிந்து வைத்துள்ள 2 பெரிய வெங்காயங்களைக் கொட்டி, அதையும் நன்கு வதக்குங்க,
  • இதனிடையில் ஏற்கனவே வதக்குவதில் இருக்கும் வரமிளகாய்களை எடுத்து ஒரு தட்டில் வைத்திடுங்க,
  • வெங்காயம் ஓரளவுக்கு கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் 6 நன்கு பழுத்த தக்காளி துண்டுகளைக் கொட்டி, மீண்டும் வதக்குங்க,
  • வதக்குவதை எளிதாக்க வேண்டும் என்றால் சிறிது உப்பை போட்டு வதக்குங்க,
  • பெருங்காயத்தூளும், கறிவேப்பிலைகளையும், போட்டு வதக்குங்க,
  • ஏற்கனவே காரத்திற்கு வரமிளகாய் போட்டு இருப்பதால், கலருக்காக காஷ்மீர் மிளகாய்த்தூளைத் தூவி வதக்குங்க,
  • ‘வதங்கிவிட்டது இனி இறக்கலாம்’ என்ற நேரத்தில் தேவையான தூள் உப்பை [ ஏற்கனவே சிறிது மட்டும் உப்பு போட்டு வதக்கினோம், நினைவு வைத்து இப்போது போடுங்க ] போட்டு இரண்டே இரண்டு வதக்கு மட்டும் வதக்கி இறக்கிவிடுங்க,

அரைத்தல்

ஆறியதும் வதக்கி வைத்ததை மிக்சியில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து  அரைங்க [ தேவை என்றால் மட்டும் புளி சேர்த்து அரைக்கலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம் ]

மீண்டும் வதக்குதல்

  • அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் காயவிடுங்க,
  • காய்ந்ததும் அடுப்புத் தீயை சிறிதாக வைத்து, தாளித்துக் கொள்ளுங்க,
  • அதாவது தேவையான கடுகு, சிறிது மட்டும் சீரகம், வரமிளகாய்கள், கறிவேப்பிலை என்று போட்டு தாளிங்க,
  • ஆறவைத்த அரைத்த விழுதைக் கொட்டி, கரண்டி வைத்து நன்கு கிளறி விடுங்க, [ எண்ணெய் மேலே லேசாக தெளிந்து வரும் வரை கிளறி விடுங்க ]
  • 4 அல்லது 5 நிமிடங்கள் கிளறிவிடும் போதே எண்ணெய் தெளிய ஆரம்பிக்கும். காஷ்மீர் மிளகாய்த் தூள் போட்டுள்ளதால் கலரும் கண்ணுக்கு விருந்தாக இருக்கும்.
  • இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடுங்க.
         [ முன்னர் வதக்கும் போதே வதக்கிய விழுது நன்கு வெந்து விட்டதால்,  பொதுவாக வீட்டில் நாம் அவசரத்தில் இப்போது இரண்டு வதக்கிலேயே எடுத்து விடுவோம், இல்லையா? அதுவும் சுவையாகத் தான் இருக்கும். எனினும் எண்ணெய் மேலே தெளிந்து வரும் வரை வதக்க விட்டு எடுத்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.] 

அவ்வளவு தாங்க. தக்காளி சட்டினி ரெடி. 

       செய்யப் போகும் போதே, போட வேண்டிய எல்லா பொருள்களையும் சரியாக அடுப்பு அருகில் எடுத்து வைத்து விட்டால், இந்த சட்னியை மிகக் குறுகிய நேரத்திலேயே எளிதில் செய்துவிடலாம். இது அவசர சட்னி மட்டுமல்ல அருமையான சட்னியும் கூட....

Tags,

thakkaali chatni, thakkaali chatni seivathu eppadi, thakkaali chatni vagaigal, kaara chatni, vengaaya chatni, தக்காளி சட்னி செய்வது எப்படி, தக்காளி சட்னி, தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள, idle side dish,

.

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.