சிக்கன் வறுவல், இது எல்லா வகை அசைவ பிரியாணிகளுக்கும் சைடு டிஷ்-ஆக சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசை கூட சேர்ந்து மட்டும் அல்ல, சாதத்தில் கூட பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். ஓகே நேரா செய்முறைக்கு போகலாம்.
சமையல் செய்றவங்களுக்கு [ தெரிஞ்சவங்க இல்லைங்க செய்றவங்க ] அவங்க செய்யும் போது என்ன அளவுன்னு அவங்களே முடிவு செஞ்சிக்குவாங்க. அதனால நான் அளவெல்லாம் சொல்ல போவது இல்லை. சும்மா உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக செய்முறை மட்டும்…..இங்கே.

- வாணலியில் தாளிக்க கடலை எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிங்க.
- அரை டீ ஸ்பூன் சீரகம், ஒரு டீ ஸ்பூன் சோம்பு போட்டு பெரிய விடுங்க.
- வதக்குவதற்காக வெட்டி வைத்த சின்ன வெங்காயம் கொஞ்சம் பெரிய வெங்காயம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
- நிறம் மாறி வரும் வரை வதக்கி, பிறகு கறிவேப்பிலை சேர்த்து இரண்டு வதக்குங்க.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- ஓரளவுக்கு வெந்ததும், அடுத்து வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து அதையும் வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு போடவும். தக்காளி விரைவில் வதங்குவதற்காகவும் இப்போதே உப்பு சேர்ப்பார்கள்.
- நன்றாக மசாலா பதத்திற்கு வதக்குங்க.
- தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இத்தனையும் சேர்த்து எண்ணெயில் வதக்கும் போது வரும் வாசம் இந்த வறுவலுக்கு சுவையை அதிகரிக்கும்.
- தேவையான அளவு அதாவது சிறிதளவு உலர்ந்த வெந்தய இலைகளை [ கஸ்தூரி மேத்தி ] நீரில் அலசி இதில் தூவி அதையும் வதக்கிவிடுங்க.

உலர்ந்த வெந்தய இலைகள் [ கஸ்தூரி மேத்தி ]
- இப்போ தேவையான மஞ்சள் தூள் போடுங்க.
- மிளகாய் தூளும், மல்லித்தூளும் சரி சமமாக போடுங்க.
- கறிமசாலா பொடியையும் தூவுங்க.
- வதக்கும் போது, வறலாக இருக்கும். சிறிது மட்டும் தண்ணீர் தெளித்து வதக்குங்க.
- பச்சை வாசம் லேசாக போய்விட்டது என்று உணர்ந்தால், நீர்க்க இல்லாமல் வருவலுக்குத் தேவையாக அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- கொதிவரும் போது சிக்கனைப் போடுங்க.
- வாணலியில் சிக்கன் இருக்கும் போது தண்ணீர் அதற்கு மேல் சிறிதளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
- இப்போது மீண்டும் வதக்குங்க. வதக்க வதக்க சுருண்டு தொக்கு போல வரும்.
- மல்லித்தழை தூவி இருக்குங்க.
இது வறுவல் என்பதால் அருகில் இருந்து கைவிடாமல் வதக்குங்க. இல்லை எனில் லேசாக அடிபிடித்து சுவை மாறிவிடும்.
சப்பு கொட்டுங்க!!!!சாப்புடுங்க!!! ம்ம்ம்ம்ம்……
