
கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி?
கொண்டக்கடலை குருமா
channa masala in tamil
இது மிக எளிதான செய்முறை. சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், சப்பாத்தி பூரியோடு வைத்து தொட்டுக் கொள்ளலாம்.
வேக வைத்தல்
- கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்க, [ அல்லது இரவில் படுப்பதற்கு முன்பு ஊற வைக்கவும் ]
- ஊறிய கொண்டக்கடலையை குக்கரில் உப்பு போட்டு வேக வைங்க,
- வெந்த கொண்டைக்கடலையை வேக வைத்த நீரோடு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளுங்க. channa masala in tamil
மசாலா அரைத்தல்
- வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய வையுங்க,
- இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு, சிறிதே சிறிது கல்பாசி, ஒரே ஒரு ஏலக்காய் போடுங்க, அதனுடன் சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு எல்லாவற்றையும் போட்டு வறுத்துக்கோங்க,
- நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்குங்க,
- ஊற வைத்த சிறிது கசகசா சேருங்க,
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு, நறுக்கிய தக்காளி சேர்த்துக்கோங்க,
- தேங்காய் துருவல் தேவைக்கு சேருங்க, வதக்குங்க,
- நன்கு வதக்கிய பிறகு எடுத்து ஆற வைத்து, பிறகு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுங்க.
[ நான் இளம் தேங்காய் வீட்டில் இல்லாவிடில் ஒரு 10 அல்லது 12 முந்திரி பருப்புகளை தேங்காய்க்கு பதிலாக சேர்ப்பேன். முந்திரி பருப்பு வேண்டாம் என்றால் சிறிது பொட்டுக்கடலை கூட சேர்க்கலாம். [ பொட்டுக்கடலை சிறிது சுவையை மாற்றிவிடும், என்றாலும் அதுவும் வேறு சுவையில் நன்றாகவே இருக்கும். ]
கொண்டக்கடலை குருமா செய்முறை
- வானொலியில் எண்ணெய் ஊற்றி காய விடுங்க,
- எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, ஒரு பட்டை, ஒரு ஏலக்காய் போடுங்க,
- பொரிந்ததும் கருவேப்பிலை இலையை உருவி போடுங்க,
- அரைத்து வைத்திருந்த மசாலா விழுதை சேருங்க,
- இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேருங்க,
- [ ஒவ்வொன்றையும் சேர்க்கும் போது இரண்டு வதக்கு வதக்கி அடுத்ததை சேருங்க.] channa masala in tamil
- தேவைப்பட்டால் தண்ணீரை தெளிக்க மட்டும் செய்து, லேசாக சுருண்டு வரும் வரை வதக்குங்க,
பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்குங்க.
- பச்சை வாசனை போனதும், ஒரு ஸ்பூன் வர மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா அதாவது மல்லித்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், சிறிது மஞ்சள் தூள் சேருங்க,
- தேவையான அளவு கல் உப்பை சேருங்க. [ வேகவைத்த கொண்டைக்கடலையில் ஏற்கனவே உப்பு போட்டு தான் வேக வைத்தோம். நினைவில் கொண்டு உப்பை சேர்க்கவும். தூள் உப்பு கூட போடலாம். ]
- நன்கு வதக்குங்க, [ முதலிலேயே தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி விடுவதால் எண்ணெய் பிரிந்து சுருள வதங்கி வரும்.]
- இப்பொழுது வேகவைத்த கொண்டைக்கடலையை வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து ஊற்றி கிளறி விடுங்க.
[ குறைந்த அளவு தண்ணீரோ அல்லது அதிக அளவு தண்ணீரோ வேண்டாம். குருமா அதாவது கிரேவிக்கு தேவையாக தண்ணீரைக் கணக்கிட்டு ஊற்றவும். அதே போல பச்சை தண்ணீரை ஊற்றினால் குருமா சப்பென்று இருக்கும்.]
- சிறியதாக வைத்து மூடி போட்டு கொதிக்க விடுங்க,
- அவ்வப்போது கிளறி விடுங்க.
- குருமா பதத்திற்கு வந்தவுடன், சிறிது கொத்தமல்லி தலையை நறுக்கி, அதில் தூவிவிட்டு இருக்குங்க.
[ கொண்டைக்கடலை என்பதால் வாணலியின் அடியில் போய் தங்க வாய்ப்பு இருப்பதால், அடி பிடிக்கும். அதனால் அடிக்கடி மூடியை எடுத்து கிளறி விட வேண்டும். அதே போல மூடி போட்டு கொதிக்க விடுங்க. இல்லையென்றால் தெறித்து சுற்றிலும் சிதறும்.]
Tags,
கொண்டக்கடலை குருமா செய்வது எப்படி, கொண்டக்கடலை கிரேவி செய்வது எப்படி, How to make peanut guruma, How to make peanut gravy, இட்லி தோசை தொட்டுக்கொள்ள, idle dosai side dish, kondakadalai kurma, kondakadalai gravy, channa masala in tamil,
.
