பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டங்கள்

ஒவ்வொரு பெண்ணுமே வெவ்வேறு வகையான உடல் வகை கொண்டவர்கள் அவர்கள். அதனால் அவர்களுக்கு வரும் மாதவிடாய் நிற்கும் விதங்களும், சரி காலகட்டங்களும் சரி வெவ்வேராகவே இருக்கும். ‘ஏன் இப்படி வருது?, ஏன் மாதவிடாய் எனக்கு மாத்தி மாத்தி வருது?, எனக்கு மாதவிடாய் நிற்க போற நேரம் வந்துருச்சா? இதை எப்படி தெரிந்து கொள்வது? யார் கிட்ட கேட்கிறது?’ – என்று நடுத்தர வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவருக்குமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரி எண்ணங்கள் கண்டிப்பாக வரும், இல்லையா? இது தொடர்பான அதிகமான சிந்தனைகளும், கேள்விகளும் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கான விடையாக கூட இந்த கட்டுரையை உங்களுக்கு இருக்கலாம். இந்த கட்டுரை பெண்கள் தன் வாழ்க்கையில் எந்த காலகட்டங்களில் இந்த மாதவிடாய் நிற்றலை [ The periods when menstruation stops in women ] எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி தான். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் நிற்கும் காலகட்டங்கள்

’45 முதல் 55 வயது வரையிலான காலகட்டம் மாதவிடாய் நிறுத்தத்திற்குச் செல்வதற்கான ஒரு சாதாரண காலகட்டமாக இருக்கும்’ என்பது பொதுவாக மருத்துவர்களின் கூற்று. ஆனால் சில பெண்களுக்கு அவர்களின் 30வது  வயதில் சீக்கிரமாகவோ அல்லது 50வது வயதிற்குப் பிறகும் கூடவோ இந்த மாற்றங்களைக் காண்கிறார்கள்.

மாதவிடாய் நிறுத்தம் முழுவதுமாக நிற்பதற்கு முன்னர் சுமார் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘ப்ரீ மெனோபாஸ்’ தொடங்குகிறது. இந்த காலகட்டங்களில் ரத்தப்போக்கு இளம் வயதிலிருந்து வழக்கமாக வரும் நிலையில் இருந்து மாறுபட்டு குறைந்தோ, அதிகரித்து வரத் தொடங்குகிறது. சிலருக்கு இது சிறிது சிறிதான மாற்றமாகவும், பலருக்கு அது வெளிப்படையாக நன்றாக தெரிந்து, பயத்தை ஏற்படுத்த மாற்றமாகவும் காணபடலாம். 

என்றாலும் இது 40 களின் நடுப்பகுதியில் தான் முனைப்பாக செயல்பட தொடங்குகிறது. அதாவது மாதவிடாய் முழுவதுமாக நின்று விடும் காலத்திற்கு முன் உள்ள 6 மாதமாகவோ அல்லது 1 வருடமாகவோ நடக்கும் மாற்றங்கள் ஆகும். 

ப்ரீ மெனோபாஸ் காலத்தில், பெண்கள் உடலில் உள்ள முக்கிய பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனின் அளவுகளில் மாற்றம் நிகழத்துவங்கும். அதாவது நமக்குத் தெரிந்த அளவில் சொல்ல வேண்டும் என்றால், உதிர போக்கு செயல் நடைபெற காரணமான ஹார்மோன்களின் அளவு ஏறி இறங்கும். அதனால் மாதவிடாய் காலங்கள் நீடித்தோ அல்லது குறைந்தோ ஆகலாம். இது உண்மையில் மாதவிடாய் நிறுத்த முயற்சிகளில் ஒன்றாக இருந்தால், பெண்களின் கருப்பைகள் முட்டைகளை வெளியிடாது. மேலும் பெண்களுக்கு திடீர் உடல் சூடு, தூங்குவதில் சிரமம் மற்றும் பிறப்புறுப்பில் வறட்சி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

சிலருக்கு மட்டும் அதாவது ரத்தப்போக்கு காலங்களில் வயிறு வலி இல்லாமல் அசௌகரியத்தை மட்டும் உணர்ந்து, சாதாரணமாக எல்லோரையும் போல நாட்களை கடத்தும் சில பெண்களுக்கு மட்டும் இந்த மாதவிடாய் நிற்கும் காலகட்டமும் சரி, நிற்கும் விதமும் சரி, நின்ற பிறகும் ச,ரி உடல் நிலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே எதிர்கொள்கின்றனர். ஆனால் மனநிலையில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். இது எல்லோருக்கும் பொதுவானது.

ஆனால் பெரும்பாலான பெண்கள் இந்த நேரங்களில் குறைந்த பட்சம் 4-5 ஆண்டுகளுக்கு மோசமான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். இருப்பினும் முழு மாதவிடாய் நிறுத்த பயணம் என்பது கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வரை நீடிக்கும். 40 வயதிற்கு முன்னரே சிலருக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதும் உண்டு. இது வெகு அபூர்வமாக நடக்கும் நிகழ்வு ஆகும். 

சில மருத்துவ நிலைகள் அல்லது நடைமுறைகள் ஆகியவற்றை பெண்ணின் உடல் ஏற்கும் போது, அச்செயல் அவர்களுக்கு ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தை ஏற்படுத்தலாம்.

    தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்துவிட்டார்கள் என்றும், மாதவிடாய் நிற்கும் முந்தைய நிலை முடிந்துவிட்டது என்றும் அர்த்தம்.

Tags,

மாதவிடாய் நிற்கும் காலம், மாதவிடாய், period pain,maathavidai vali, veettu vaithiyam, kai vaithiyam, vayitru vali, adivayitru vali, menses problem in tamil, Menstrual pain, Menstrual pain in tamil, மாதவிடாய் வலி, வயிற்று வலி, அடிவயிற்று வலி, Menopause, menstruation stops, menstruation stop period,

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top