
கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்ய, கோதுமை மாவுடன் வெல்லம்/சர்க்கரை, பழுத்த வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு (விருப்பப்பட்டால்), பால் சேர்த்து அவரவர்களுக்கு விருப்பமான சமையல் பொருட்களை வைத்து செய்வார்கள். அது சமையல் செய்யும் திறமை + ஆசையை பொறுத்து அமையும். எனினும் இதற்கு அடிப்படை கோதுமை மாவு மற்றும் சக்கரை/வெல்லம் தான்.
சிலர் அவசரத்திற்கு இரண்டை மட்டும் வைத்து சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவார்கள். என் வீட்டில் என்னுடைய மகள் 8வது படிக்கும் போது இப்படி அவளே செய்து சாப்பிட்டு விடுவாள். இப்போது அவள் விருப்பத்திற்கு சிலதை இணைத்து செய்கிறாள்.
அப்படி செய்வதில் அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதும் ஒரு வகை. இங்கு நாம் அதை பார்க்கலாம்.
கோதுமை மாவு இனிப்பு பணியாரம்
தேவை
- கோதுமை மாவு 1 கப்
- அரிசி மாவு 1/2 கப்
- பொடித்த வெல்லம் 1 கப்
- உப்பு 1 சிட்டிகை மட்டுமே
- ஏலக்காய் தூள்
- சோடா உப்பு 2 சிட்டிகை
- தேங்காய் துருவல் கொஞ்சம் [ மேல் ஓடு வரை துருவல் வெள்ளை துருவல் மட்டும் ]
- சமையல் எண்ணெய்
மாவுக்கலவை
- ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க,
- அதில் ஒரு கப் அளவுக்கு கோதுமை மாவு எடுத்து போட்டுக்கோங்க.
- அதில் அரிசி மாவு அரை கப் சேர்த்துக்கோங்க,
- உப்பு ஒரு சிட்டிகை அளவுக்கு மட்டும் போடுங்க, [ இது சுவை கூட்டும் ]
- ஏலக்காய் தூள் தேவையானது போடுங்க,
- சிறிது சோடா உப்பு சேருங்க,
- அதன் மேல் துருவி எடுத்து வைத்த தேங்காய் துருவலைத் தூவி விடுங்க,
- எல்லாவற்றையும் கலந்து பிசறி விடுங்க. [ நீர் சேர்க்காமல் ]
- தனியே எடுத்து வைங்க.
வெல்லத்தண்ணீர்

- அடுப்பு மிதமான தீயில் எரியவிட்டு, அதில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வையுங்க,
- அதில் ஒரு கப் பொடித்த வெல்லத்தை போடுங்க,
- உடனேயே அரை கப் அளவுக்கு தண்ணீரை அந்த வெல்லத்தில் ஊத்திக்கோங்க,
- இப்போது வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரைத்து விடுங்க,
- கரண்டியில் கலக்கிக் கொண்டே வெல்லம் முழுவதும் தண்ணீரில் கரையும் வரை கொதிக்க விடுங்க, [ பாகு பதம் வரவேண்டிய அவசியம் இல்லை. கரைந்து கொதித்தால் மட்டும் போதுமானது ]
- அடுப்பை அனைத்து பாத்திரத்தை இறக்கி விடுங்க.
கரைத்துவிடுதல்

- கலந்து வைத்த மாவு கலவையை எடுத்துக்கோங்க,
- இறக்கி வைத்த வெல்லக் கரைசலை சூடாக இருக்கும் போதே வடிகட்டி ஊற்றிக் கரண்டியை வைத்து கலந்து விடுங்க,
- மாவு கலவை மிக கெட்டியாக உருண்டு வரும் நேரத்தில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவைக் கலந்து விடுங்க,
- மாவு இட்லி மாவு பதத்திற்கு கரைந்த பிறகு நிறுத்தி விடுங்க.
[ ஒரேடியாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கும் கரைத்து விட வேண்டாம். தண்ணீர் போதாமல் மிக கெட்டியாகவும் இருக்க வேண்டாம். தண்ணீர் கொஞ்சம் அதிகரித்தாலும் எண்ணெய் குடிக்க ஆரம்பித்து விடும் ]
இனிப்பு பணியாரம்

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடுங்க,
- [ எண்ணெய் காய்ந்ததும் ஒரு துளி மட்டும் மாவு எடுத்து அதில் போட்டு பாருங்க, பொரிந்து மேலே எழும்பி வந்தால் எண்ணெய் சரியான சூட்டிற்கு வந்து விட்டது என்று அர்த்தம்.]
- இப்பொழுது மாவை சிறிது சிறிதாக [ கையிலோ இல்லை கரண்டியிலோ இதில் வேண்டுமானாலும் சிறிதளவு மட்டும் ] எடுத்து எண்ணெயில் போடுங்க,
- பொன்னிறமாக வர ஆரம்பிக்கும் பொழுது, ஆப்பத்தைத் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்து விடுங்க,
அடுப்பு மிதமாக எரிவது மிக முக்கியம். அப்போதுதான் ஆப்பத்தின் உள்ளிருக்கும் மாவும் கூட வெந்து வரும்.
அவ்வளவுதான் கோதுமை மாவில் இனிப்பு பணியாரம் ரெடி.
Tags,
gothumai maavu inippu paniyaram, கோதுமை மாவு இனிப் பணியாரம், கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி, கோதுமை மாவு பணியாரம், Wheat flour sweet paniyaram, How to make wheat flour sweet paniyaram, Wheat flour paniyaram, கோதுமை மாவு அப்பம், கோதுமை மாவு இனிப்பு அப்பம், gothumai maavu inippu appam, Sweet Wheat Flour Dumplings,
.
