உடைத்து, அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி செய்வது எப்படி?

உடைத்து அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி

‘குழந்தைகள் சாவகாசமா வீட்ல இருக்காங்க… விடுமுறை வேற, பெரியவங்களும் இருக்காங்க. எல்லாருமே சாப்பாடு சீக்கிரமா கேக்குறாங்க. விரைவாகவும் சமைக்கணும், அவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுற மாதிரியும் இருக்கணும், என்ன பண்ணலாம்?’ – னு யோசிக்கிறீங்களா?. வீட்ல முட்டை இருக்கா? அப்போ முட்டை கிரேவி வச்சிருங்க.

வீட்ல பிரிட்ஜ்ல எப்பவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் வச்சிருப்போம், இல்லையா? அப்புறம் தேங்காய் துருவலும் சில பேர் வச்சிருப்பாங்க. நான் எல்லாம் தேங்காய் துருவலை துருவனா கண்டிப்பா ஒரு அஞ்சு நாள் பிரிட்ஜில் நல்லா காத்து போகாத பிளாஸ்டிக் கண்டெய்னர்ல போட்டு வைத்திருப்பேன். அதனால இப்போ வீட்ல இஞ்சி பூண்டு பேஸ்ட் இருக்கு, தேங்காய் துருவலும் இருக்கு, முட்டைகளும் இருக்கு. எல்லாம் இருந்தா 15 நிமிஷம் தான் ஆகும், இந்த முட்டை கிரேவி வைக்க. அப்படி இல்லாமல் தேங்காயை அப்போது தான் துருவி வைக்க வேண்டும் என்றாலும் கூட அதிகம் 10 நிமிடங்கள் தான் ஆகும். அவ்வளவு தான் நேரம் எடுக்கும். இந்த கிரேவியை சாப்பாட்டில் போட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்று பாக்கலாமா?

     எப்பொழுதுமே முட்டையை பயன்படுத்துவதற்கு முன்னால் தண்ணீரில் அழுத்தி பிடிக்காமல் முட்டை ஓட்டை கழுவி விடுங்கள். [ அழுத்தினால் முட்டை படக் என்று உடைந்து விடும் ] மேலும் மூழ்கும் அளவுக்கு உள்ள தண்ணீரில் முட்டையை போட்டு பாருங்க. முட்டை பாத்திரத்தின் தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். லேசாக தூக்கி தலையை தொடாமல் முட்டை இருந்தாலும் கூட அது சந்தேகத்திற்குரிய முட்டைதான். அதை தவிர்த்து விடவும். குழந்தைகளுக்கு அது தருவது மிகவும் ஆபத்து.

அரைத்தல் 
  1. தேங்காய் துருவல் 1/2 மூடி
  2. பச்சை மிளகாய் 1
  3. பட்டை 2, கிராம்பு 2, ஏலக்காய் 2
  4. சோம்பு 1ஸ்பூன்
  5. கசகசா 1 ஸ்பூன்
  6. முந்திரி 3 அல்லது 4 [ தேவைப்பட்டால் ]
  • மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்க,
  • தேங்காய் துருவல்களை அதில் போடுங்க,
  • பச்சை மிளகாயை உடைத்து அதில் போடுங்க,
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் உள்ள தேங்காய் மேல் போடுங்க,
  • தேவைப்பட்டால் சுவைக்காக முந்திரி 3 அல்லது 4 ஐ உடைத்து [ பூச்சி இருக்கிறதா என்று பார்த்து ] போடலாம்,
  • இப்போது எல்லாவற்றையும் அரைத்து தனியே வைத்திருங்க.

கிரேவி கூட்டி வைத்தல் 
  1. சமையல் எண்ணெய்
  2. நீளநீளமாக வெட்டிய பெரிய வெங்காயம் 1
  3. கறிவேப்பிலை
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  5. தக்காளி பழம் 2
  6. கல் உப்பு
  7. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  8. வர மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  9. குழம்புத்தூள் 2 ஸ்பூன்
  10. சிக்கன் மசாலா தூள் 1 ஸ்பூன்
  11. முட்டைகள் 4 அல்லது 5
  12. கொத்தமல்லி அல்லது புதினா தழைகள் சிறிது
  13. மிளகு தூள் சிறிது
  • அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய விடுங்க,
  • எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீக்கு மாற்றிடுங்க,
  • அதில் நீளநீளமாக வெட்டிய ஒரு பெரிய வெங்காயம் போடுங்க,
  • சிறிது கறிவேப்பிலையும் உருவி போடுங்க, வதக்குங்க.
  • பாதி வதங்கியதும், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு மீண்டும் வதக்குங்க,
  • பச்சை வாசனை போனதும், தக்காளி பழம் இரண்டு [பெரிதாக இருந்தால் 2, சிறிதாக இருந்தால் 3 ] சிறிது சிறிதாக நறுக்கியது அதையும் போட்டு வதக்குங்க,
  • தேவையான உப்பு போடுங்க, [ கல் உப்பு சுவை கூட்டும் ]
  • சுருள வந்ததும், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் வர மிளகாய் தூள், 2 ஸ்பூன் குழம்புத்தூள், [ எந்த குழம்புத்தூளாக இருந்தாலும் சரி ] 1 ஸ்பூன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து லேசாக வதக்கி விடுங்க,
  • ரெண்டு வதக்கு வதக்கியது, அரைத்து தனியாக எடுத்து வைத்திருந்த தேங்காய் மசாலாவை கிரேவியில் ஊற்றி, கரண்டியால் இரண்டு கிளறு கிளறி விடுங்க,
  • அதில் தேவையான தண்ணீரை ஊற்றி மீண்டும் கிளறுங்க.
  • மூடி வைத்து கொதிக்க விடுங்க,

      அவ்வப்போது மூடியை எடுத்து விட்டு கிளறி விடுங்கள். அடுப்பு தீ ரொம்பவும் அதிகம் எரிய விடவேண்டாம். 

  • ‘லேசாக வதங்கி வந்து விட்டது’ என்று தெரிந்ததும், ‘பச்சை வாசனை இல்லை’ என்று உணர்ந்ததும், எடுத்து வைத்திருந்த 4 அல்லது 5 முட்டைகளைத் தனித்தனியாக ஒவ்வொரு இடமாக பார்த்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்குமாறு, கிரேவியில் உடைத்து ஊற்றுங்க,
  • மீண்டும் மூடி வைத்து கொதிக்க விடுங்க,
  • ‘சிறிது கொதித்து விட்டது’ என்று உணர்ந்ததும், ஒரு கரண்டியால் அதில் உள்ள முட்டைகளை லேசாக திருப்பி விடுங்க,
  • மேலும் அதில் கொத்தமல்லி அல்லது புதினா இலைகளை நன்றாக பிய்த்து, மேலாக உதிர்த்து விடுங்க,
  • தேவைப்பட்டால் சுவைக்கு மிளகுத்தூளையும் கிரேவியில் மேலாக தெரிகின்ற முட்டையின் மீது தூவி விடுங்க,
  • இப்பொழுது மீண்டும் மூடி வைத்து இரண்டு நிமிடம் மட்டும் கொதிக்க விடுங்க,
  • அடுப்பை அனைத்து கிரேவியை இறக்கிவிடலாம்.

அவ்வளவுதாங்க அருமையான சுவையான முட்டை கிரேவி ரெடி.

இதை செய்வதற்கு ‘அதிகபட்சம் 15 நிமிடங்கள்’ மட்டுமே ஆகும். ஏனெனில் நாம் தான் தேங்காய் துருவலையும், இஞ்சி பூண்டு விழுதையும், ஏற்கனவே ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்திருப்போமே. அதனால் வெங்காயமும், தக்காளியும் நறுக்க வேண்டிய வேலை மட்டும் தான் நமக்கு இருக்கும். வானொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய விடுவோம் இல்லையா? அந்த நேரத்திலேயே நாம் அவற்றை நறுக்கி வைத்து விடலாம். அவசரத்திற்கு என்று செய்தாலும், வயிறு முழுவதுமாக நிரம்பும் அளவிற்கு உண்ணக்கூடிய சுவையுடன் தான் இந்த முட்டை கிரேவி இருக்கும். செய்து பாருங்கள்.

Tags,

உடைத்த முட்டை கிரேவி செய்வது எப்படி, கிராமத்து முட்டை குழம்பு, உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி, முட்டை குழம்பு கிரேவி. முட்டை குழம்பு செய்வது எப்படி, முட்டை குழம்பு வகைகள், உடைந்த முட்டை குழம்பு, முட்டை கறி, ஈசி முட்டை குழம்பு, முட்டை குழம்பு, எளியமையான முட்டை குழம்பு, How to make broken egg gravy in tamil, village-style egg curry in tamil, how to make broken egg curry, egg curry gravy. How to make egg curry, types of egg curry, egg drap curry, easy egg curry, egg gravy, உடைத்து அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி, udaiththu utriya muttai gravi, araiththu vaitha muttai kulambu,

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top