சிக்கன் வறுவல்

சிக்கன் வறுவல், இது எல்லா வகை அசைவ பிரியாணிகளுக்கும் சைடு டிஷ்-ஆக சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசை கூட சேர்ந்து மட்டும் அல்ல, சாதத்தில் கூட பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். ஓகே நேரா செய்முறைக்கு போகலாம்.

சமையல் செய்றவங்களுக்கு [ தெரிஞ்சவங்க இல்லைங்க செய்றவங்க ] அவங்க செய்யும் போது என்ன அளவுன்னு அவங்களே முடிவு செஞ்சிக்குவாங்க. அதனால நான் அளவெல்லாம் சொல்ல போவது இல்லை. சும்மா உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக செய்முறை மட்டும்…..இங்கே.

  • வாணலியில் தாளிக்க கடலை எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிங்க.
  • அரை டீ ஸ்பூன் சீரகம், ஒரு டீ ஸ்பூன் சோம்பு போட்டு பெரிய விடுங்க.
  • வதக்குவதற்காக வெட்டி வைத்த சின்ன வெங்காயம் கொஞ்சம் பெரிய வெங்காயம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
  • நிறம் மாறி வரும் வரை வதக்கி, பிறகு கறிவேப்பிலை சேர்த்து இரண்டு வதக்குங்க.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • ஓரளவுக்கு வெந்ததும், அடுத்து வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து அதையும் வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு போடவும். தக்காளி விரைவில் வதங்குவதற்காகவும் இப்போதே உப்பு சேர்ப்பார்கள்.
  • நன்றாக மசாலா பதத்திற்கு வதக்குங்க.
  • தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இத்தனையும் சேர்த்து எண்ணெயில் வதக்கும் போது வரும் வாசம் இந்த வறுவலுக்கு சுவையை அதிகரிக்கும்.
  • தேவையான அளவு அதாவது சிறிதளவு உலர்ந்த வெந்தய இலைகளை [ கஸ்தூரி மேத்தி ] நீரில் அலசி இதில் தூவி அதையும் வதக்கிவிடுங்க.

உலர்ந்த வெந்தய இலைகள் [ கஸ்தூரி மேத்தி ]

  • இப்போ தேவையான மஞ்சள் தூள் போடுங்க.
  • மிளகாய் தூளும், மல்லித்தூளும் சரி சமமாக போடுங்க.
  • கறிமசாலா பொடியையும் தூவுங்க.
  • வதக்கும் போது, வறலாக இருக்கும். சிறிது மட்டும் தண்ணீர் தெளித்து வதக்குங்க.
  • பச்சை வாசம் லேசாக போய்விட்டது என்று உணர்ந்தால், நீர்க்க இல்லாமல் வருவலுக்குத் தேவையாக அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  • கொதிவரும் போது சிக்கனைப் போடுங்க.
  • வாணலியில் சிக்கன் இருக்கும் போது தண்ணீர் அதற்கு மேல் சிறிதளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • இப்போது மீண்டும் வதக்குங்க. வதக்க வதக்க சுருண்டு தொக்கு போல வரும்.
  • மல்லித்தழை தூவி இருக்குங்க.

இது வறுவல் என்பதால் அருகில் இருந்து கைவிடாமல் வதக்குங்க. இல்லை எனில் லேசாக அடிபிடித்து சுவை மாறிவிடும்.

சப்பு கொட்டுங்க!!!!சாப்புடுங்க!!! ம்ம்ம்ம்ம்……

pengalthalam

Recent Posts

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

3 days ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

3 days ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

4 days ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

4 days ago

உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் | முழுமையான வழிகாட்டி

. உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் படைப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான…

5 days ago

Soft Productivity: அதிகமாக உழைப்பது அல்ல… நிம்மதியாக முன்னேறுவதுதான் உண்மையான வெற்றி!

. Soft Productivity என்றால் என்ன? பகுதி 1: "எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான் நான் ஓய்வெடுப்பேன்..." இந்த ஒரு…

2 weeks ago

This website uses cookies.