அக்பர் & பீர்பால்

மிகப் பெரிய பேரரசரான அக்பரையும், அவரின் புத்திசாலி அரசவை அமைச்சரான பீர்பாலையும் உள்ளடக்கிய அற்புதமாக இந்திய நாட்டுப்புறக் கதைகள் தான் இந்த அக்பர் பீர்பால் கதைகள். மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவரின் கதைகள் கூறுகின்றன. இவரின் கதைகள் நேர்மை, விரைவான சிந்தனை மற்றும் நியாயத்தன்மை பற்றிய ஒழுக்கங்களைக் கற்பிப்பது, அறிவை பயன்படுத்தி சிக்கல்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது போன்றவற்றை கதை கேட்பவர்களுக்கு எடுத்து கூறும் விதங்களில் அமைந்திருக்கின்றன. காகங்களை எண்ணுவது, மந்திரக் குச்சிகளைக் கொண்டு திருடர்களைக் கண்டுபிடிப்பது அல்லது புத்திசாலித்தனமான தந்திரத்தாலும், வாதங்களாலும் சவால்களை முறியடிப்பது போன்ற இவரின் பல கதைகள் குழந்தைகள் மிக விரும்பி கேட்கும் விதங்களில் அமைந்திருக்கும். 

யார் இந்த அக்பர் மற்றும் பீர்பால்?
அக்பர் –

சலாலுத்தீன் முகம்மது அக்பர்

இந்திய வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த முகலாய பேரரசர் இவர். முகலாய வம்சத்தில் முதல் பேரரசரும் இவர்தான். இந்தியாவின் பெரும் பகுதியை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தவர் ஆவார். சிறப்பாக ஆட்சி நடத்தி நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்களை செய்து ஆட்சி செய்தார். நீதி நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தார். நெடிய தோற்றமும், கூறிய பார்வையும் கொண்ட இவரின் முக வசீகரமே இவருக்கான அன்பையும் மக்களின் ஆதரவையும் பெற்று தந்தது. இவர் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் சிறந்தவர். சாகும் வரை பதவியில் இருந்தவரும் கூட இவர் தான்.

பீர்பால் –

மகேஷ் தாஸ் / பீர்பால்

இவரது இயற்பெயர் மகேஷ் தாஸ். இவர் அக்பரின் அரசவையில் அமைச்சராகவும், கவிஞராகவும் இருந்தார். அதாவது அக்பருக்கு மிகச்சிறந்த ஆலோசகராக பணிபுரிந்தார். இவர் இவரின் நகைச்சுவைக்காகவும், புத்திசாலித்தனத்திற்காகவும் பேரரசர் அக்பரின் பிரியத்திற்கு உகந்தவராக இருந்தார். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் கதைகளின் மூலம் பீர்பால் இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாக அறியப்படுகிறா,ர் புகழப்படுகிறார். பேரரசர் அக்பரின் அரசவையில் ‘நவரத்தினங்கள்’ என்று அழைக்கப்பட்ட முக்கிய உறுப்பினர் குழுவில் இவரும் ஒருவர். இவரது கதைகள் பலவற்றில் சில கதைகள் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பல கதைகள் கற்பனையாக மக்களால் வடிவமைக்கப்பட்டவை தான். இவர் பேரரசர் அக்பர் மற்றும் அந்நாட்டு மக்களின் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தன் புத்தி கூர்மையினால் தீர்வுகளை கண்டு, அதனை வினோதமான வழிகளில் வெளிப்படுத்தவும் செய்தவராவார்.

ஏன் அக்பர் மற்றும் பீர்பால் கதைகள் பிரபலமாக உள்ளன?
  • அக்பர் மற்றும் பீர்பால் கதைகள் மிகவும் எளிமையானவை மற்றும் நகைசுவையானவை. இந்தக் கதைகள் புரிந்துகொள்வது எளிது, நீளமாக இல்லாமல் குறுகிய சிறு சிறு கதைகளாக இருக்கும். எப்போதும் ஒரு ஒழுக்கப் பாடத்துடன் முடிவடையும்.
  • இந்த கதைகள் குழந்தைகளை சிரிக்க வைக்கின்றன, அதே நேரத்தில் அவர்களுக்கு நேர்மை, கருணை மற்றும் நீதி ஆகியவற்றின் பெருமைகளையும், முக்கியத்துவத்தையும் கற்பிக்கின்றன.
  • தந்திரமான சூழ்நிலைகளைக் கையாள்வதில் பீர்பாலின் புத்திசாலித்தனத்தை இந்த கதைகளின் மூலம் காணலாம்.
  • அவை காலத்தால் அழியாதேவையாக குழந்தைகள் மட்டுமல்லாது  பெரியவர்களும் ரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
  • எத்தனை முறை மீண்டும் மீண்டும் கேட்டாலும் அல்லது சொல்லப்பட்டாலும், இந்தக் கதைகள் ஒருபோதும் அவற்றின் அழகை இழப்பதில்லை.

        முகல் பேரரசர் அக்பர் மற்றும் அவரது நம்பிக்கையான அமைச்சர் பீர்பால் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள், சிக்கல்களைச் சமாளிக்கும் புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவை உள்ளடக்கியதாக இருப்பது இந்தக் கதைகளின் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு சிறிய உரையாடலைக் கூறலாம்.

ஒரு நாள் அக்பர் மன்னர் பீர்பாலிடம் கேட்டார்:
“உலகத்தில் மிகவும் வேகமாக ஓடும் விஷயம் என்ன?”
பீர்பால் உடனே பதிலளித்தார்:
“மன்னா, மனசு தான் மிகவும் வேகமானது.”
அக்பர் ஆச்சரியப்பட்டார்: “அது எப்படி?”
பீர்பால் சொன்னார்:
“நாம் இங்கே உட்கார்ந்திருக்கும்போது கூட, நமது மனம் ஒரு கணத்தில் தூரத்தூரம் பயணம் செய்து விடுகிறது.”
அக்பர் பீர்பாலின் புத்திசாலித்தனத்தை பாராட்டினார்.

இத்தகைய சிறப்புகளை பெற்றிருக்கும் இவரை இவரின் கதைகளின் வழியாக இங்கு நாம் தெரிந்து கொள்ளலாமா? வாருங்கள் சிறுவர்களாக இருந்தால் வாசித்து மகிழலாம். பெரியவர்களாக இருந்தால் வாசித்து, அதை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கூறலாம்.

கதைகளின் தலைப்புகள்
  1. அக்பர் மற்றும் பீர்பாலின் முதல் சந்திப்பு
  2. காகங்களின் எண்ணிக்கை
  3. யார் செய்த விபரீதம் இது?
  4. மந்திரக் கைத்தடி
  5. .
  6. .
  7. .
  8. .

இன்னும் வரும்….

Tags,

அக்பர் பீர்பால் கதைகள், நகைச்சுவை கதைகள், அறிவுரை கதைகள், ஊக்கப்படுத்தும் கதைகள், அக்பர் பீர்பால், புத்திசாத்தனமான கதைகள், Akbar Birbal stories in tamil, humorous stories in tamil, advice stories in tamil, motivational stories in tamil, Akbar Birbal, wise stories in tamil, குழந்தைகள் கதைகள், அரசர் கதைகள், சிறு கதைகள், சிறுவர் கதைகள், Children stories, king stories, short stories, children’s stories,

.

pengalthalam

Recent Posts

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

1 day ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

1 day ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 days ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

3 days ago

உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் | முழுமையான வழிகாட்டி

. உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் படைப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான…

3 days ago

Soft Productivity: அதிகமாக உழைப்பது அல்ல… நிம்மதியாக முன்னேறுவதுதான் உண்மையான வெற்றி!

. Soft Productivity என்றால் என்ன? பகுதி 1: "எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான் நான் ஓய்வெடுப்பேன்..." இந்த ஒரு…

2 weeks ago

This website uses cookies.