# https://blog.pengalthalam.com > பெண்களுக்கான வலைப்பதிவு ## Posts - [பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா](https://blog.pengalthalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): ‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா மாதிரியே குழம்பு கலர்ல வருதுபா…’ என்று ‘பூரியே போடவேண்டாம் போ’ தள்ளி வைத்துவிட்டீர்களா? ‘உணவகத்தில் மட்டும் பூரிக்கு மசாலா எப்படி இப்படி ஒரு சுவையில் இருக்கிறது?’ – என்று யோசனை நம்மில் பலருக்கு உண்டு தானே. கீழே உள்ள படிநிலைகள் படி இந்த செய்முறையைச் செய்து பாருங்களேன்…அதையும் ரசித்து செய்து பாருங்கள். நீங்கள் விரும்பியது போல சுவையாக உங்களுக்கும் வரும். அதை அடிக்கடி செய்தால், உங்களால் விரைவாக குறைந்த நேரத்தில் கூட பூரியையும், மசாலாவையும் செய்து அசத்த முடியும். செய்முறைக்கு போகலாமா? உருளைக்கிழங்கு மசாலா மசாலாவிற்கு தேவையானவை செய்முறை [ வெங்காயமும் உருளைக்கிழங்கும் அதிகமாக இதில் சேர்ப்பது நல்லது. பூரி மசாலா நீர்க்க குழம்பு போல இல்லாமல், கிரேவி மாதிரி பூரி மசால் […] - [உப்பலான சாப்ட் பூரி](https://blog.pengalthalam.com/%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf/): மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? ‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து தான் வருகிறது.’ ‘பூரி ஏன் உப்பவே இல்ல’ இவை சில நேரங்களில் காதில் விழும் சலிப்புகள் தான். இதை விட ‘பூரி வட்டமாவே வரல பா…’ ம் கூட சொல்லுவார்கள். என்ன செய்தால் பூரி மென்மையாக, சுவையாக பிய்த்து சாப்பிட எளிதாக இருக்கும்? – என்று பார்க்கலாமா? பூரிக்கு தேவையானவை செய்முறை தண்ணீர் அல்லது கை பொறுக்கும் மட்டும் உள்ள வெந்நீர் எடுத்து வைத்தோம் அல்லவா? அதை மொத்தமும் அப்படியே ஊற்றி விடக் கூடாது. சிறிது தண்ணீர் ஊற்றி உடனே ஒரு சில பிரட்டு, பிறகு மீண்டும் சிறிது தண்ணீர் மற்றும் சில பிரட்டு, என்று தண்ணீரை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க, இருக்க மாவு நம் கையில் உருள ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் […] - [சாதாரண காது வலி - உருவாக காரணம் மற்றும் தீர்வு ](https://blog.pengalthalam.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be/): உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால் மட்டுமே உடனடி நிவாரணமாக நாமே என்ன செய்யலாம் என்பதை நாமே பார்க்கலாம். காரணம் மற்றும் தீர்வு  சாதாரணமாக கொஞ்சம் அதிகமாக ஜலதோஷம், சளி என்று வந்து அவதிப்படும்போது அதோடு தொடர்புடைய காதும் அதன் அழுத்தத்தினால் வலிக்க தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்று நாம் உணர தொடங்கினால், ஜலதோஷத்திற்காக நாம் எடுத்துக் கொள்ளும் ஆவி பிடித்தல் முறையிலேயே இந்த காது வலியும் குறைவதை காணலாம். அப்படியும் குறையவில்லை எனில் வலி நிவாரணிக்காக பாராசிட்டமால் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படும் சாதாரண வலிக்கும் பாராசிட்டமால் கொள்ளலாம். உடனடி நிவாரணையாக அந்த நேரத்திற்கு இந்த பாராசிட்டமால் செயல்படும். மருத்துவரிடம் போவதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் தற்காலிகத் தீர்வாக இருக்கும். […] - [வறட்டு இருமல் வந்தால் செய்ய வேண்டியவை](https://blog.pengalthalam.com/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): நமக்கு வரும் இருமல்களில் சில நேரங்களில் சளி இருமல் ஆக இல்லாமல் வெறும் வறட்டு இருமல் ஆக தொண்டையில் லேசான வலியுடன் வரும். இப்போதெல்லாம் இருமல் மருந்தை நம்பி குழந்தைகளுக்கு கொடுக்க இயலுவதில்லை. இருமல் மருந்தை பெரியவர்கள் அருந்தினாலே புத்தி ஒரு நிலையில் இல்லாமல், மந்தமாக இருப்பதை உணரலாம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், பாங்கு அடித்தது போல ஒருவித போதை நிலையிலேயே இருப்பதை உணரலாம். தெளிவாக வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல் மருந்துகளிலேயே இந்த நிலை என்றால், பரிந்துரை இல்லாமல் கடைகளில் வாங்கும் மருந்துகளை அருந்தும் குழந்தைகளின் நிலை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இருமல் மட்டும் வந்தால் அதற்காக மட்டுமே ஆன வைத்தியத்தை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும். அவசர வைத்தியம் தொடர் இருமல் கைக்குழந்தைகளுக்கு [தேன் தொண்டையில் நன்கு படவேண்டும் என்பதால் இதனைக் கொடுத்ததும் வழக்கம் போல தண்ணீர் எதுவும் சிறிது நேரம் கொடுக்கவேண்டாம். […] - [சுவையான டீ குடிப்போமா?](https://blog.pengalthalam.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be/): மொத்தமே ஒரு 10 நிமிடங்களில் சுவை மிகுந்த டீ கிடைத்துவிடும். குறிப்பு : பாலில் டீ சாறு இறங்கிய பிறகு இஞ்சியை போடும் போது, பாலின் சுவையும், தன்மையும் மாறாமல் இருக்கும். திரிந்தும் போகாது.  Tags, டீ, தேயிலை, coffee, காப்பி, pengalthalam, samayal, tasty tea, tea kadai tea, . - [தக்காளி ரசம்](https://blog.pengalthalam.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): இந்த தக்காளி ரசம் முன்பு எங்க வீட்டு சின்ன விருந்துக்கு, எங்க பக்கத்து வீட்டு சமையல்காரம்மா செய்ஞ்சாங்க….மறுபடியும் செய்முறை கேட்டு போட்டு இருக்கேன். [ இது விருந்துக்கான தக்காளி ரசம். வீட்ல நமக்கும் முயற்சி செய்யலாம். நல்லாத்தான் இருக்கும். யாரு நம்மள கேட்பா? ] முன்பே ரெடி செய்து வைக்க வேண்டியவை தக்காளி பிசறல்        இப்போது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசறிவிடுங்க. பிசறி விட்டதை எடுத்து தனியே தனியே வைத்திடுங்க. ரசம் கூட்டி வைத்தல் இருங்க! இன்னும் இருக்குங்க… அவ்வளவு தான் தக்காளி ரசம் ரெடி. Tags, thakkaali rasam, rasam, தக்காளி ரசம், ரசம், காய்ச்சல் ரசம், . - [அக்குள் அழுக்கு பிடிப்பு நீங்க செய்ய வேண்டியவை](https://blog.pengalthalam.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/):   நிறைய பேருக்கு அக்குள் பகுதிகளில் வரும் ரோமங்களில் ஒரு அடுக்கு மாதிரி அதன் மேல் ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மொத்தமாக வடிந்து இருக்கும். குளித்தாலும், சுத்தப்படுத்தும் முயற்சிகள் செய்தாலும் அது போகாமல் அப்படியே அப்பிக்கொண்டு இருப்பதைக் காணலாம். இதனால் அங்கு சேரும் வியர்வை ஒருவித வாடையுடன் வெளிவந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்னை அக்குள் பகுதியில் மட்டும் அல்லாமல் உடலில் வெயில் படாத இடம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு எல்லாம் அப்பிக்கொண்டு இருக்கும். இதற்கு முக்கியமாக ஒருவித பாக்டீரியா காரணமாக இருக்கிறது. ரகசிய இடங்களில் இருக்கும் முடிகளில் வியர்வையின் காரணமாக ஈர பதங்கள் இருக்கும். அப்பொழுது அங்கு இந்த பாக்டீரியாக்கள் ஏற்படத் தொடங்குகின்றன. சிலருக்கு நெஞ்சில் இருக்கும் முடியில் கூட இந்த தன்மை இருப்பதை காணலாம்.   பாக்டீரியா என்றதும் பயந்து விட வேண்டாம். அது மட்டும் அல்ல இது தீர்க்க முடியாத பிரச்சனையும் அல்ல. இது எல்லோருக்கும் […] - [மாதவிடாய் வலி - போக்கும் வழிகள்](https://blog.pengalthalam.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/):              ‘அப்பொழுது அந்த வழியை என்னால் தாங்கவே முடியவில்லை. என்னால் இயல்பாக எளிதான வேலையை கூட செய்ய முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கிறது. நான் அலுவலகத்திற்கு, அல்லது படிப்பதற்கு மற்றும் வெளி வேலைகளுக்கு செல்லும் நிலையில் இல்லை. மேலும் என்னால் தாங்க முடியாத அளவிற்கு வலியும் வேதனையும் நான் அனுபவிக்கிறேன்,’    என்று புலம்புகிறீர்களா? இல்லை உங்களின் அருகில் இந்த புலம்பல் கேட்டு இதற்கு என்ன தான் வழி? என்று தோன்றுகிறதா? கீழே பொதுவாக மருத்துவர்கள் மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களும் தன் அனுபவத்தில் கூறி இருப்பதை எழுதி இருக்கிறேன். ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற வேகத்தில் ஒவ்வொன்றாக என் 2 பெண் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் கொடுத்து வந்தவை தான் இவைகள். [ எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. ஒரு நாளும் வலி என்று நான் முனங்கியது இல்லை. ஆனால் […] - [காலிபிளவர் 65](https://blog.pengalthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-65/): காலிஃப்ளவரின் [ Cauliflower ] தமிழ் பெயர் ‘பூக்கோசு’ அல்லது ‘பூங்கோசு’ அப்படின்னு சொல்லுவாங்க. சில இடங்களில் ‘இலைச்சுருளி’ அப்படின்னும் சொல்லுவாங்க. இது காரசாரமா மசாலாவில் ஊற வைத்து, எண்ணெயில் பொரிச்சு எடுக்கிற உணவாகத் தான் அதிகம் செய்யப்படுகிறது. காலிபிளவர் மத்த காய்கறிகளைப் போலவே ஊட்டச்சத்து நிறைந்தது தான். ஆனாலும் இதை சாப்பிடுறதுனால சிலருக்கு வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை அதாவது அல்சர் இதெல்லாம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. அதனால தினமுமோ அல்லது அடிக்கடியோ இந்த காலிபிளவரைச் சாப்பிடுவதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் கவனம் தேவை. கோபி 65 ன்னு சொல்லப்படும் இந்த காலிபிளவரை எப்படி வருவரு மொறுமொறுன்னு செய்யுறது பார்க்கலாமா? மீண்டும் அடுத்த ஈடு காலிபிளவர் பூக்களைப் போடுவதற்கு முன்னர், தீயை அதிகப்படுத்தி எண்ணெய்யை, முதல் போல மீண்டும் சூடு ஆகச் செய்து, பின் தீயை மீடியம் அளவில் வைத்து, முதல் போலவே அடுத்தடுத்த பூக்களையும் எண்ணெயில் போட்டு […] - [சிக்கன் வறுவல்](https://blog.pengalthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/): சிக்கன் வறுவல், இது எல்லா வகை அசைவ பிரியாணிகளுக்கும் சைடு டிஷ்-ஆக சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசை கூட சேர்ந்து மட்டும் அல்ல, சாதத்தில் கூட பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். ஓகே நேரா செய்முறைக்கு போகலாம். சமையல் செய்றவங்களுக்கு [ தெரிஞ்சவங்க இல்லைங்க செய்றவங்க ] அவங்க செய்யும் போது என்ன அளவுன்னு அவங்களே முடிவு செஞ்சிக்குவாங்க. அதனால நான் அளவெல்லாம் சொல்ல போவது இல்லை. சும்மா உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக செய்முறை மட்டும்…..இங்கே. உலர்ந்த வெந்தய இலைகள் [ கஸ்தூரி மேத்தி ] இது வறுவல் என்பதால் அருகில் இருந்து கைவிடாமல் வதக்குங்க. இல்லை எனில் லேசாக அடிபிடித்து சுவை மாறிவிடும். சப்பு கொட்டுங்க!!!!சாப்புடுங்க!!! ம்ம்ம்ம்ம்…… - [மெத்தென்ற இட்லி](https://blog.pengalthalam.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): இட்லி – இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அது மட்டும் இல்லை இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால், உடல் நிலை சரியில்லாத நிலையில் உண்ணக்கொடுக்கப்படும் உணவும் கூட. அதனாலேயே இந்த இட்லி மிக மிக மென்மையாக இருக்க வேண்டியது அவசியமும் கூட. இது அரைத்த அரிசி மற்றும் உளுந்து கலந்து புளித்த மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் மென்மையான, பஞ்சுபோன்ற கேக்குகளாக வேகவைக்கப்படுகிறது. இது பொதுவாக தேங்காய் சட்னி மற்றும் பலவகையான சாம்பாருடன் பரிமாறப்படுகிறது, நம்மில் பலருக்கும் இந்த இட்லி அந்த அளவுக்கு மென்மையாக வராது, இல்லையா? ‘ஏதோ நானும் இட்லி ஊற்றுகிறேன்’ என்ற பெயரில் தான் வீட்டில் நாம் செய்வோம். ஆனால் நாம் அரைக்கும் முறைகளில் சிறிது முயற்சி எடுத்து சரியான அளவில் பொருட்களைக் […] - [காலை/மாலை உணவிற்கு ஏற்ற 5 நிமிட உருளைக்கிழங்கு சீவல் அப்பம்](https://blog.pengalthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-5-%e0%ae%a8/) - [மூச்சு பிடிப்பு முதுகு வலி - வைத்தியம்](https://blog.pengalthalam.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/): முதுகில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிதாக உணரத்துவங்கும் வலி நேரம் செல்லச் செல்ல அதிகமாகி ஒரு கட்டத்தில், இடுப்புக்கு மேல் பகுதியை சிறிது அசைத்தாலும் வலி பின்னும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு புள்ளியைச் சுற்றி அலை அலையாக வலியை நாம் இடைவிடாமல் உணர்ந்து கொண்டே இருப்போம். பல்லைகடித்து தாங்கினாலும் வலியில் கண்ணில் நீர் நிறைவதை நம்மால் தடுக்க முடியாது. காரணங்கள் முதுகில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பது போல….. இவை எல்லாம் முதுகில் மூச்சு பிடிப்பு ஏற்பட்டு முதுகு வலி வரக் காரணங்களாகும். உடனடி முயற்சி கை வைத்தியம் வைத்தியம் 1 ஒரு கரண்டி மட்டும் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து கொள்ளவும். ஆறிய பிறகு ஒருவித கெட்டி தன்மையுடன் இருக்கும். அதில் சிறிதளவு சுக்குப் பொடியை சேர்க்கவும். கடையில் சுக்கு பொடி என்றே கிடைக்கும். அதே அளவு பெருங்காத்தூளையும் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு கட்டி கற்பூரத்தை பொடித்து சேர்க்கவும். […] - [சூடான சாதத்திற்கு சுடச்சுட அவசர மோர் குழம்பு](https://blog.pengalthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): காரசாரமான பொரியல், அவியல் ன்னு எதோ கொஞ்சம் இருக்கு…ஆனா பிசைஞ்சி சாப்பிட மட்டும் கொஞ்சமாவது ஏதாவது இருக்குதா பாரேன்? – யோசிக்கிறீர்களா??????? கெட்டி தயிர் இருக்கா? அப்போ சட்டுன்னு சூடு ஆறிடறதுக்குள்ள மோர் குழம்பு செய்ஞ்சிடலாமா? ரொம்ப புளிக்காத கட்டி தயரா உங்களுக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கோங்க. அது கூட ஒரு அரை கப் அளவுக்கு தண்ணியும் சேர்த்து கரண்டி வச்சு நல்ல அடிச்சு விட்டுக்கோங்க. கொஞ்சம் கூட கட்டி இல்லாம நல்லா முட்டை அடிக்கிற மாதிரி அடிச்சுக்கணும். மிக்ஸ்சி-ய விட கை பெஸ்ட். எந்த அளவுக்கு தண்ணி ஊத்தணும் அப்படிங்கறது உங்களுக்கு எந்த அளவுக்கு அந்த கிரேவி வரணும்னு நினைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ரொம்ப தண்ணியா இருக்க கூடாது, அதே மாதிரி ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது. இப்ப நல்லா கடைஞ்சு விட்டாச்சா அவ்வளவுதான் இதை எடுத்த தனியா வச்சிரலாம். அடுத்து ஒரு குழம்பு வைக்கிற பாத்திரத்துல […] - [பட்டர்பிளை போஸ் - பெண்கள் தினமும் செய்ய வேண்டிய யோகாசனங்கள்](https://blog.pengalthalam.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): உடலில் உள்ள நிகழ்வுத் தன்மையை மேம்படுத்தி, பதற்றத்தை குறைக்க இந்த பட்டாம்பூச்சி போஸ் உதவுகிறது. மிகத் தீவிரமான பல்வேறு வகையான உடற்பயிற்சிகளையோ, யோகாசனங்களையோ தினமும் செய்யும்பொழுது உடல் சிறிது இறுக்கமாக தோன்றும். அப்போது உடலை இறுக்க நிலையில் இருந்து, தளர்வடையச் செய்வதற்காக இந்த பட்டாம்பூச்சி போஸ் செய்யப்படுகிறது. இது அமைதியை அதிகப்படுத்துவதுடன் புத்தியை தூண்டி விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. இது பவுண்ட் அங்கிள் போஸ் [Bound Angle Pose] அல்லது காப்ளர் போஸ் [Cobbler Pose] என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்பவர்களாக இருந்தால், அதன் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ அல்லது இந்த பட்டாம்பூச்சி போஸ் ஐ மட்டும் தனி பயிற்சியாகவோ நீங்கள் செய்யலாம். தனி பயிற்சியாக என்றால், நீங்கள் டிவி பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது இல்லையென்றால் பேசிக் கொண்டிருக்கும்போது கூட எந்த நேரத்திலும் நீங்கள் இதை செய்ய முடியும். ரொம்ப எளிமையானது. இந்த கட்டுரை பட்டாம்பூச்சி போஸ் […] ## Pages - [புதியவை](https://blog.pengalthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%af%88/) - [Home](https://blog.pengalthalam.com/home/): தலைப்புகள் : ஆரோக்கியம் : வைத்தியம் : மூச்சு பிடிப்பு முதுகு வலி சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு வறட்டு இருமல் வந்தால் செய்ய வேண்டியவை அக்குள் அழுக்கு பிடிப்பு நீங்க செய்ய வேண்டியவை மாதவிடாய் வலி – போக்கும் வழிகள் யோகா : பட்டர்பிளை போஸ் – பெண்கள் தினமும் செய்ய வேண்டிய யோகாசனங்கள் ஆலோசனை : சமையல் : சைவம் : சூடான சாதத்திற்கு சுடச்சுட அவசர மோர் குழம்பு மெத்தென்ற இட்லி தக்காளி ரசம் உப்பலான சாப்ட் பூரி பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா சிற்றுண்டி : காலிபிளவர் 65 சுவையான டீ குடிப்போமா? அசைவம் : சிக்கன் வறுவல் பாஸ்ட் குக் : காலை/மாலை உணவிற்கு ஏற்ற 5 நிமிட உருளைக்கிழங்கு சீவல் அப்பம் சூடான சாதத்திற்கு சுடச்சுட அவசர மோர் குழம்பு [comment]: # (Generated by Hostinger Tools Plugin)